பொன்னாங்கண்ணி கீரை

கீரைகளின் ராஜா என்று அழைக்பப்படுவது பொன்னாங்கண்ணி கீரை.

அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது. பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் எனினும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதேபோல் மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது.

பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது உயர் வசதி படைத்தவர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது. ஆனாலும் அந்த சத்து ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தக் கீரை பெரும்பாலும் நீர்நிலைகளான குளம் குட்டை கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டு பொன்னாங்கண்ணி என இருவகை உண்டு.

இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணிதான் பல அருங்குணங்கள் கொண்டது.

மருத்துவ குணங்கள்
பொன்னாங்கண்ணி தூக்கத்தை தூண்டக் கூடியது. மத்திய நரம்பு மண்டலத்தை சீர்செய்து சாந்தப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் குணமாகிறது. ஞாபக சக்தியை தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்கக்கூடியது.
பொன்னாங்கண்ணி சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. ரத்த வாந்தியை நிறுத்தக்கூடியது. ஈரலை பலப்படுத்தவல்லது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகக்கூடியது.

முடி வளர
பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.

மலட்டு தன்மையை நீக்கும்
பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் கொனேரியா எனும் பால்வினை நோய் குணமாகும். ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது. தலைவலி, தலைச்சுற்றலை தணிக்க வல்லது. குடலிறக்க நோய் ஆன ஹெர்னியா தணிவதற்குத் துணையானது. பொன்னாங்கண்ணி நெஞ்சு சளியைக் கரைக்க வல்லது. மார்பு இறுக்கத்தைப் போக்கும்.

புற்றுநோயை தடுக்கும்:
ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்ற வல்லது. பொன்னாங்கண்ணி நுண்கிருமிகளை அழிக்க வல்லது. பொன்னாங்கண்ணி புண்களை ஆற்றக் கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி புற்று நோய் வராமல் தடுக்க கூடியது.

பார்வையை அதிகரிக்கும்
பொன்னாங்கண்ணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவை பார்க்கலாம் என்பது பழமொழி. அந்த அளவிற்கு கண் பார்வை மிக துல்லியமாக தெரிய உதவுகிறது. பொன்னாங்கண்ணியை உப்பு சேர்க்காமல் வேக வைத்து இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

கண் நோய்கள் விலகும். பொன்னாங்கண்ணி கீரையை நன்கு மைய அரைத்து அதை நீர் நிரப்பிய மண் பானை மீது வைத்திருந்து மறுநாள் காலையில் எடுத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கட்டி வைத்திருந்தால் கண் நோய்கள் குணமாகும்.

பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு பசுவின் பால், கரிசலாங்கண்ணிச் சாறு இவை சம அளவு எடுத்து இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி தலைக்கு தேய்த்து தலை முழுகி வர 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்.

பொன்னாங்கண்ணி கீரையை வதக்கி உடன் மிளகு, உப்பு போதிய அளவு சேர்த்து கற்ப மருந்தாக ஒரு மண்டலம் உண்ண உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்குக் குளிர்ச்சி ஆகியன உண்டாகும் புகைச்சல், ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும்.

ஒருபிடி பொன்னாங்கண்ணி கீரையை காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விட்டு பசும்பால் அருந்தி வர உடல் குளிர்ச்சி பெற்று ஈரல் நோய்கள் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கிப் பார்வையும் தெளிவு பெறும்.

சிறுநீர் எரிச்சல்
எலுமிச்சம்பழ அளவு பொன்னாங்கண்ணியின் வேரை எடுத்து சுத்திகரித்து 2 லிட்டர் எருமைப் பால் விட்டு கலக்கி காய்ச்சி தயிராக உறைய வைத்து கடைந்தெடுத்த வெண்ணெயை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு விட்டு மோரையும் குடித்துவர சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.

உடல் எடை
பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

உடல்சூடு
பொன்னாங்கண்ணி இலைச்சாறு, நல்லெண்ணெய் தலா ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது. குறைந்தபட்சம் 12 மாதங்களாவது தொடர்ந்து சாப்பிட்டால் பலனை கண் கூடாக பார்க்கலாம்.

Advertisements

2 thoughts on “பொன்னாங்கண்ணி கீரை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s