நியூ[ஸ்]மார்ட்

99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நிகழ உள்ளது. சூரியனின் மையப் பகுதியை முழுமையாக நிலா மறைப்பதால் ஏற்படும் இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம் நிகழும் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது.  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும்.

சென்னை மானகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையரான லலிதா ஐ ஏ எஸ் த்ன் மகள் தருணிகாவை கோடம்பாக்கத்தில் உள்ள மானகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார். “ கற்பித்தலிலும் மற்ற குழு செயல்பாடுகளிலும் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் மானகராட்சிப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன.  இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களின் உயர் கல்விச் செலவையும் மானகராட்சியே ஏற்றுக்கொள்கிறது. பள்ளிகளில் விரைவில் 28 ஸ்மார் வகுப்பறைகள் ஏற்பட உள்ளன. ஏராளமான சாதனையாளர்களும் ஐ ஏ எஸ் அதிகாரிகளும் இங்கு உருவாகி இருக்கின்றனர்.” என்கிறார் ஐ ஏ எஸ் அதிகாரி லலிதா.

மூன்று ஆண்டுகளுக்கு முன் எம் ஹெச் 370 என்ற மலேசிய விமானம்  இந்திய பெருங்கடல் பகுதியில் காணாமல் போனது.  அதைத் தேடும் பணியில் ஆஸ்திரேலியா மலேசியா சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. இந்தியப் பெருங்கடலின் ஆழ்ந்த பகுதியில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 1.20 லட்சம் சதுர கிலோமீட்டர் தூரத்தில் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் எந்த பலனும் இல்லை.  தேடுதலின்போது கடலுக்குள் புதிய உலகம் புதைந்து கிடப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அதன் வரைபடத்தை  வெளியிட்டுள்ளனர். கடலுக்குள் சுமார் 6 கிலோ மீட்டர் அகலம் 15 கிலோமீட்டர் நீளத்தில் முகடுகளும் 5 கிலோ மீட்டர் அகலம் 1200 மீட்டர் ஆழத்தில் பள்ளத்தாக்குகள் மற்றும் எரிமலைகள் இருப்பதும் தெரியவந்துள்ளன.

தென்னிந்தியாவின் முக்கியத் தொழில் நகரம் தூத்துக்குடி பஸ் ரயில் கப்பல் விமானம் என நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் கொண்டது.  இங்கு மானகரப் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட பெட்ரோல்  பங்குகளில் மாற்றுத்திறனாளிகளே வாகனச் சக்கரங்களுக்குக் காற்றடைக்கும் பணியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட அளவிலும் பல பங்குகளில் மாற்றுத்திறனாளிகளே இந்தப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் போற்றுதலுக்குரிய இந்தச் சேவையால் தூத்துக்குடி மாவட்டத்தில் தவழும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் குளோபல் ரோபாடிக்ஸ் ஒலிம்பியாட் என்ற பெயரில் நடைபெற்ற முதல் சர்வதேச ரோபோ போட்டியில் ஏழு இந்திய மாணவர்களைக் கொண்ட குழு இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.  வாஷிங்கடனில் நடைபெற்ற இப்போட்டியில் 157 நாடுகள் பங்கேற்றன. மும்பையைச் சேர்ந்த மாணவர் ஜாவ் ஹெங் பொறியியல் வடிவமைப்புக்கான போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். சர்வதேச சேலஞ்ச் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும் இந்திய மாணவர்கள் வென்றனர்.  15 வயது மாணவர்கள் குழுவான ராகேஷ் ஆதிவ் ஷா  ஹர்ஷ் பட் வத்சின் ஆதியான் தேஜாஸ் மற்றும் ராகவ் முதலானோர் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s