பழநிப் பதிகம்

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர். தலங்கள்தோறும் சென்று முருகப்பெருமானை தரிசித்தவருக்கு காஞ்சியில் முருகப்பெருமாளே வழிகாட்டி குமரக்கோட்டத்துக்கு அழைத்துச் சென்ற அற்புதமும் நடந்தது.  பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானின் எண்ணற்ற தலங்களை தரிசித்திருந்தாலும் அவரால் பழனிக்க்கு சென்று பழனி ஆண்டவரை தரிசிக்க முடியவில்லை. அதன் பிண்ணனியில் அமைந்துள்ள நிகழ்ச்சி இதுதான்.

பாம்பன் சுவாமிகளின் இயற்பெயர் அப்பாவு என்பதாகும். அவர் ஒரு நாள் அங்கமுத்து பிள்ளை என்பவரிடம் தான் பழனிக்கு செல்லப்போவதாக கூறினார்.  எங்கே அவர் பழனிக்கு சென்றால் திரும்பி வராமல் சன்னியாசம் வாங்கிவிடுவாரோ என்ற எண்ணம் அங்கமுத்து பிள்ளைக்கு   எனவே அவர் பாம்பன் சுவாமிகளிடம் நீ பழனிக்கு போவதற்கு முருகன் உத்திரவு கொடுத்துவிட்டானா? என்று கேட்டார்.  உடனே பாம்பன் சுவாமிகள் சற்றும் தயங்காமல் ஆம் பழனிக்கு வருவதற்கு முருகப்பெருமான் உத்திரவு கொடுத்து விட்டான் என்று கூறினார்.  உண்மையில் அவருக்கு அப்படி ஓர் உத்திரவு கிடைக்கவில்லை.  அன்று மதியம் அவர் பக்திப்பாடல்களை பாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு நேராக வானத்தில் காட்சி கொடுத்தார் முருகப்பெருமான். அவருடைய தோற்றம் அச்சுறுத்தும் வண்ணம் இருந்தது.  தன் வலக் கை சுட்டு விரலை நீட்டி நானா உன்னைப் பழனிக்கு வரும்படி அழைத்தேன்?  ஏன் அப்படி சொன்னாய்/ என்று அச்சுறுத்துவது போல மிரட்டலாக கேட்டார்/ பாம்பன் சுவாமிகளோ சற்றும் அஞ்சாமல் ஐயனே நான் பொன்னும் பொருளும் உன்னிடம் பெறவேண்டும் என்பதற்கா பொய் சொன்னேன்? உன் அருள் பெற்று துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்றுதானே விரும்பினேன் என்று கூறினார்.

எப்படி பார்த்தாலும் என் பக்தனான நீ பொய் சொன்னது தவறுதான். இனி என் உத்திரவு கிடைக்கும் வரை நீ பழனிக்கு வரவே கூடாது என்றும் உத்திரவு போட்டுவிட்டார்.  பாம்பன் சுவாமிகள் சித்தி அடையும்வரை அவருக்கு பழனிக்கு சென்று முருகப்பெருமானை தரிசிக்கும் பேறு கிடைக்கவே இல்லை.  அப்படியிருந்தும் பழனி முருகப்பெருமானை நேரில் தரிசித்தது போன்ற அனுபவத்தில் பாம்பன் சுவாமிகள் பழனிப்பதிகம் என்று பத்து பாடல்களை இயற்றி அருளினார். அவற்றில் பழனி முருகப்பெருமானின் திருவுருவத்தை அப்படியே வர்ணிக்கும் வகையில் அமைந்த ஒரு பாடல்

முண்டிதம் இல் சிறு சிகையும் இடையில் அணி கவுசலையும்

முழு மதியம் என மிளிரும் முகமும் ஒருகைத்

தண்டும் உரம் உறு புரியும் இளமை உடை உருவும் எழில்

தர இலக இருடி சுர்ர் அடிகள் எவரும்

கண்டு நலன் அடைய என அமிர்தம் மழை பொழி பெரிய

கருவி கவி பழனிமலை உறை பெரியவன்

தொண்டன் என் உள எனது மனதில் உளன் இரவு பகல்

துணையும் அவன் அணைவும் அவன் நினைவும் அவனே

இந்தப் பக்திப்பாடலை பக்தியுடன் பாராயணம் செய்து மானசீகமாக பழனி ஆண்டவரை வழிபட்டா பழனிக்கு சென்ர புண்ணியம் கிடைப்பதுடன் அழகன் முருகன் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s