நியூ[ஸ்]மார்ட்

ஒடிசா மானிலம் புவனேஸ்வரில் 22 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.  இந்தியா சீனா ஜப்பான் தென்கொரியா பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட வீர்ர் வீரங்கானைகள் பங்கேற்றனர்.  இதில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  இந்தத் தூரத்தை அவர் 14 நிமிடம் 54.48 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார். ராணுவத்தில் பணியாற்றும் லட்சுமணன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

கம்போடியா நாட்டில் ஈசான புற நகரில் உள்ள ‘ சம்போர் பிரெய்குக் ‘ என்ர இந்து கோயிலை ‘யுனெஸ்கோ’ அமைப்பு புராதனச் சின்னமாக அங்கீகரித்து இருக்கிறது. ஈசானபுரத்தைத் தலை நகராக்க் கொண்டு ஆட்சி செய்த ஈசான வர்மன் என்ற மன்னர் தமது ஆட்சி காலத்தில் [ கி பி 616 – 637 ] கட்டிய இக்கோவில் 25 சதுர கிமீ பரப்பளவில் வெளி நாட்டினர் அதிக அளவில் வரும் சுற்றுலா தலம். அந்த வம்சத்தின் கடைசி மன்னர் முதலாம் ஜெயவர்மன் ஆவார்.  இவர்கள் தமிழகத்தை ஆண்ட முற்காலச் சோழர்களின் வம்சாவளியினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வங்க தேசத்தை சேர்ந்த ரிக்கிஷா ஓட்டும் தொழிலாளி அப்துல் சமத் ஷேக்  தனது 12ம் வயதிலிருந்தே தினமும் ஒரு மரக்கன்று நட்டு வருகிறார். இப்போது 60 வயதாகும் அவர் இதுவரை 17500 மரங்களை நட்டு ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார். அரசாங்க நிலங்களில் மட்டுமே மரம் நடுவதால் யாரும் வெட்டுவதிலையாம். தன் சொற்ப வருமானத்தில் நான்கு குழந்தைகளையும் வளர்த்து மரக்கன்றுகளுக்கும் செலவு செய்து வருகிறார். தி டெய்லி ஸ்டார் என்ற அமைப்பு இவரைப் பற்றிய ஆவணப் படம் வெளியிட்டு விருதும் 82 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி சிறப்பித்துள்ளது.

இஸ்ரேலில் பெருமளவில் வளரும் கிரை சாந்தமம் வகை மலரினத்துக்கு பிரதமர் மோடியின் பெயரைச் சூட்டியுள்ளனர். கடந்த 80 ஆண்டுகளில் இஸ்ரேல் நாட்டுக்கு முதன்முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தந்ததையொட்டி இஸ்ரேலி க்ரை சாந்தமம் இனி மோடி என அழைக்கப்படும் என அந்த நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத் தகவலை இஸ்ரேல் நாட்டின் ட்விட்டர் பக்கத்தில் அரசு தரப்பில் பகிர்ந்திருந்தனர். இந்தியா இஸ்ரேல் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூதரக உறவு நீடிக்கிறது.  ஆனால் பாலஸ்தீனப் பிரச்னை காரணமாக இந்தியப் பிரதமர்கள் யாரும் இஸ்ரேல் சென்றது இல்லை.

மெக்சிகோவில் மேயர் ஒருவர் முதலையைத் திருமணம் செய்திருக்கிறார். ஒரு பெண் முதலைக்கு திருமண ஆடையை அணிவித்து தலையில் மலர்களால் கிரீடம் சூட்டி வாயைக் கயிற்றால் கட்டியபின் திருமணம் செய்திருக்கிறார்.  அதற்கு அவர் “ முதலையைத் திருமணம் செய்யும் வழக்கம் 250 ஆண்டுகளாக எங்களிடம் உண்டு  நிலத்தில் விளைச்சலோ கடலில் மீன்களோ அதிகம் கிடைக்காத காலங்களில் இது போன்ற திருமணத்தை நடத்தினால் நல்ல மழை பெய்யும்  விளைச்சல் அமோகமாக இருக்கும்  நிறைய மீன்களும் கிடைக்கும்.  மக்களின் நலன் மேல் அக்கறையுள்ள தலைவர்கள் மேயர்கள் முதலையைத் திருமணம் செய்து கொள்வது வழக்கம். மக்களும் உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள்  என்கிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s