கோயில் நகரத்தில் எங்கள் பயணம்

இம் மாதம் 16ம் தேதி காலை 5 மணிக்கு கோவில் நகரமான காஞ்சிபுரம் நோக்கி பயணமானோம்.. வெயில் இல்லாத மேகமூட்டமான தட்பவெப்ப நிலை  பயணம் சுகமாக இருந்தது.  சுமார் 6.30 மணிக்கு காஞ்சியை அடைந்தோம்.

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன.  ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில் காமாட்சியம்மன் கோயில் ஏகாம்பர நாதர் கோயில் வரதராஜபெருமாள் கோவில் ஆகிய கோவில்கள் முக்கியமானவை.  இவ்வாலயங்கள் சாக்தர்  சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப்பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது.  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்த நகரம்.  கோவில் போகும் வழியில் எங்கள் காரின் ஓட்டுனர் அந்த நினைவிடத்தையும் காண்பித்தார்.

நகரேஷூ காஞ்சி என குறிப்பிட்டு நகரங்களுள் காஞ்சி சொல்லும் அளவிற்கு பண்டைக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நகரம் இது.  சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இங்கு பயணம் மேற்கொண்டார்.  இங்கு கௌதம புத்தர் கூட வருகை புரிந்ததாகவும் வரலாறு சொல்கிறது.

முதன் முதலாக ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு போனோம். ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன

இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

இந்த சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தின் மத்தியில் காமாட்சி அம்பாள் கோவில் அமைந்துள்ளது.  இங்கு காமாட்சி அம்பாள் பத்மாசனம் பூண்டு கருணை வடிவாக அமர்ந்திருக்கிறாள்.  அம்பாளுக்கு முன்னால் ஆதிசங்கர்ர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது.  காமாட்சி அம்பாளை வழிபடுவோருக்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மன நிம்மதியும் ஏற்படுகிறது என்பதும் இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

காலை உணவை முடித்துக்கொண்டு நாங்கள் திவ்ய தேசங்களில் ஒன்றான வரத ராஜ பெருமாள் கோவிலை அடைந்தோம்.மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசித்தம்.

மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில்  கண்ணன் ராமர்  வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள் ஆழ்வார்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார்  சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம்  96 அடி உயரமுள்ளது. அன்று ஞாயிற்றுக்கிழமையானதால் கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது.

பிறகு சுமார் 11 மணியளவில் நாங்கள் சென்னையை நோக்கி பயணமானோம். எங்கள் விமானம் மாலை ஐந்துமணிக்கு இருந்ததால் வேளச்சேரியில் இருந்த என் பெண் வீட்டிற்கு சென்றோம்.  அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு இரண்டு மணி நேரம் அவர்களுடன் அளவளாவி விட்டு சுமார் மூன்றரை மணி அளவில் அங்கிருந்து விமான நிலையத்திற்கு கிளம்பினோம்.  எங்கள் விமானம் சரியான நேரத்திற்கு புறப்பட்டது.  சுமார் 7 மணிக்கு ஹைதிராபாத் விமான நிலயத்தை அடைந்தோம்.  இரவு உணவை முடித்துக்கொண்டு  கொட்டும் மழையில் சுமார் 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s