உடலுக்கு வலுசேர்க்கும் கசகசா

 

பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் மருந்துகளிலும் உணவுகளிலும் கசகசாவை பயன்படுத்தி வருகிறோம்  அதன் பயன்கள் இதோ

கசகசா மிளகு பாதாம் கற்கண்டு ஆகியவற்றைச் சம அளவாக எடுத்து நன்கு தூளாக்கவும்.  அதனுடன் பசும்பால் தேன் நெய் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து லேகியமாக்கி அதில் அரைக்கரண்டி அளவு எடுத்து பாலுடன் சேர்த்து இரவில் சாப்பிட்டு வந்தால் உடலின் வலிமை அதிகரிக்கும்.

கசகசாவை மாதுளம் சாற்றில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.  இரண்டு தேக்கரண்டி அளவு கசகசாவை கால் தம்ளர் பாலில் ஊறவைத்து பசை போல அரைத்து அதைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

அரை கோப்பை அளவு கொப்பரைத் தேங்காயைப் பூவாக சீவி  அரைத் தேக்கரண்டி கசகசாவைச் சேர்த்து துவையலாக சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

கசகசாவை தேங்காய்பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். கசகசா முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறைந்து முகம் அழகு பெறும்.  கசகசா ஜவ்வரிசி பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரிசியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் இடுப்பு வலி குணமாகும்.

20 கிராம் கொத்துமல்லியுடன் 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும்.  கசகசாவை முள்ளங்கிசாறில் ஊற வைத்து அரைத்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.  10 கிராம்

கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால் தழும்புகள் மறையும்.

 

Advertisements

One thought on “உடலுக்கு வலுசேர்க்கும் கசகசா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s