ஜப்பானில் ஜமாய்த்த நீரஜாக்ஷி

பிரபல கர்னாடக இசைக் கலைஞர் டெல்லி சுந்தர்ராஜன் கவிதா தம்பதிகளின் மூத்த மகள் நீரஜா அருமையாகப் பாடுவதில் மட்டுமல்ல அப்பாவைப்போல வயலின் வாசிப்பதிலும் வல்லவர். பி.காம் முடித்து சி ஏ படித்து வருகிறார்.

சிறு வயது முதலே தங்கை சிந்துஜாவுடன் இணைந்து அனிமேக்ஸ் சேனலில் வரும் ஜப்பான் மொழி கார்ட்டூன் படங்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டவர்  அதில் வரும் பாடல்களும் ஜப்பான் மொழியும் இவர்களுக்கு நாளடைவில் அத்துப்படியாகிவிட்டன. காரணம் ஜப்பானிய கார்ட்டூன் படங்களில் வரும் வசனத்துக்கு ஆங்கிலத்தில் வரும் சப் டைட்டிலைப் பார்த்து பார்த்தே ஜப்பான் மொழியை இருவரும் கற்றுக்கொண்டார்களாம்

“ நானும் என் தங்கையும் வீட்ல ஜப்பான் மொழியிலே பேசிக்குவோம்  இவங்க உண்மையிலேயே ஜப்பான் மொழியில் தான் பேசறாங்களா எல்ல நம்மகிட்ட விளையாடுறாங்களா? என எங்க அப்பாவுக்கு சந்தேகம். ஜப்பானைச் சேர்ந்த நண்பர் ஒருத்தரை வீட்டிற்கு வரச்சொல்லி நாங்க பேசறது என்ன மொழின்னு கேட்க அவர் எங்க கிட்ட பேசிப்பார்த்துட்டு இவங்க ரெண்டு பேரும் பிரமாதமாக ஜப்பான் மொழியில் பேசறது பெருமையா இருக்கு என பாராட்டிவிட்டு போனார் என்கிறார் நீரஜாக்ஷி.

ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் டி வி  ஜப்பானியர் அல்லாதவர்களுக்காக ஆண்டுதோறும் பாட்டுப் போட்டியை நடத்துவது வழக்கம். இது தொடர்பான அறிவிப்பை பார்த்து விண்ணப்பித்திருக்கிறார் நீரஜாக்ஷி.  ஏதோ ஓர் ஆர்வத்தில் விண்ணப்பிக்க உடனே பதில் வந்துள்ளது.  நான்கு விதமான முறையில் உங்கள் குரலை பதிவு பண்ணி அனுப்புங்கல் என்று நிப்பான் டி வி நிறுவனத்தார் அறிவிக்க உடனடியாக ஆடியோ வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பியிருந்தார்.

நீங்க போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருக்கீங்கன்னு மெயிலில் தகவல் வர ஜப்பான் புறப்படத் தயாரானோம்.  ஜப்பான் போயிட்டு வர்றத்துக்கான விமான டிக்கெட் தங்குவதற்கான இடம் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள் எல்லாத்துக்குமான செலவை நிப்பான் டி வி நிறுவனத்தாரே ஏத்துக்கிட்டாங்க. என விவரிக்கிறார் நீரஜாக்ஷி.

இவருக்கு உதவியாக அப்பாவும் தங்கையும் ஜப்பான் செல்ல அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது இந்தியா சார்பாக தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் நீரஜாக்ஷி என்பது.  இதற்கு முன் இந்தியா சார்பாக பலர் போட்டியாளர்களாக பங்கேற்றாலும் அவர்கள் பரிசு பெறவில்லை  என்பது தெரிந்தபோது ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார் நீரஜாக்ஷி.

இருபது ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்ததில் குரல் பரிசோதனை ஆடியோ வீடியோ பரிசோதனை என பல கட்டங்களுக்குப் பிறகு இறுதியில் போட்டியில் பங்கேற்க இவருக்கு மட்டுமே அழைப்பு வந்துள்ளது.   நார்வே அமெரிக்கா இந்தோனிஷியா பெரு  அர்ஜெண்டினா என பல நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்க நான்கு பேர் நீதிபதிகளாக் இருந்துள்ளனர். மூன்று மணி நேரம் நடந்த போட்டியில் 400 பாயிண்ட்கள் பெற்று இந்தியா சார்பாக முதல் முறையாக முதல் இடத்தை வென்று சாதனை படைத்துள்ளார்  நீராஜாக்ஷி.

இந்தியப் பெண் ஒருவர் ஜப்பான் மொழியில் அற்புதமாகப் பாடுவதை கவனித்த நடுவர்கல் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோனார்கள்  ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்டு இவ்வளவு அற்புதமாக இந்தியப் பெண் ஒருவர் பாடுவது எங்கள் மொழிக்கு கிடைத்த பெருமை என பாராட்டியதுடன் புரந்தரதாசர் இயற்றிய ஜகதோ தாரண பாடலையும் நீரஜாக்ஷியைப் பாடச்சொல்லி கேட்டு ரசித்தார்களாம்.

இந்த உலகமே இசையின் கைகளில் தான் என்பதைக் குறிக்கும் வகையில் இரு மைக்குகள் உலக உருண்டையை தாங்கி நிற்பது போல் உருவாக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கேடயம் நீரஜாக்ஷிக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  இந்தப் பரிசோட மதிப்பு என்னவென்று எனக்கு தெரியாது. ஆனா வேற நாட்டு மொழியில கற்றுத் தேர்ந்து அதில் முயற்சி செய்து ஒரு பாட்டைப்பாடி வெற்றி பெறும்போது அதற்கு உரிய பாராட்டாகத்தான் இந்தப் பரிசைப் பார்க்கிறேன்.  எனக்கு இந்த பரிசு கிடைக்கிறத்துக்கு அடி நாதமாக இருந்தது கர்னாடக இசைதான்  இன்னும் ஜப்பான் மொழியை முழுமையாக்க் கற்கும் முயற்சியில் இறங்கியிருக்கேன். தொடர்ந்து கர்னாடக சங்கீதமும் கற்றுக்கிட்டு வருகிறேன். ஒரு பக்கம் இசை மற்றொரு பக்கம் படிப்பு எதிர்காலத்தில் இவை இரண்டும்தான் என்னோட இலக்குகள் என்று தன் குயில் குரலில் சொல்லிவிட்டு சிரிக்கிறார் நீரஜாக்ஷி.

 

நன்றி   மங்கையர் மலர்

Advertisements

2 thoughts on “ஜப்பானில் ஜமாய்த்த நீரஜாக்ஷி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s