புத்தரின் போதனை

புத்தரும் அவரது சீடர்களும் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தனர்.  அவர்களுக்கு எதிர்புறமாக வந்த மூவர் புத்தரையும் சீடர்களையும் பார்த்து ஏதோ தரக்குறைவான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு சென்றனர். சீடர்களுக்குப் பெருத்த அதிர்ச்சி.  கோபத்துடன் அந்த நபர்களைத் திரும்பிப்பார்த்தபடியே நடந்தனர்.  புத்தர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.  அவர் தமது கால் போனபோக்கில் நடந்து கொண்டிருந்தார்.  சீடர்களுக்கு வேறு வழியில்லை. கோபத்தை அடக்கியபடி புத்தரை அமைதியாகப் பின் தொடர்ந்தனர்.

சற்று நேரத்திற்கு பிறகு வேறொரு தெருவுக்கு வந்தார் புத்தர்.  தெருவில் அவரவர் வீடுகளுக்கு வெளியே திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கல் புத்தரையும் சீடர்களையும் கண்டதும் சட்டென எழுந்து வீட்டுக்கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே போயினர்.  சீடர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி.  புத்தரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தனர். அவர் ஒரு வார்த்தை உதிர்த்திருந்தால் போதும். அல்லது அவரது ஒரு கண் அசைவு மட்டும் போதும் அந்தத் தெருவையே அடித்து நொறுக்கி துவம்சம் செய்யுமளவுக்கு ஆத்திரத்தில் இருந்தார்கள் சீடர்கள்.  ஆனால் புத்தர் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்.  அவரது முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லை. சாந்தம் தவழ்ந்து கொண்டிருந்தது.  உதடுகளில் வழக்கமான புன்னகை.

வேறு வழியின்ரி தங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்தியபடியே சீடர்கல் அவரைப் பின் தொடர்ந்தனர்.  நீண்ட நேர நடைக்குப் பிறகு அவர்கள் ஒரு வனத்தை அடைந்தனர்.  புத்தர் அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.  சீடர்கள் அவருக்கு சற்றுத் தள்ளி அமர்ந்தனர்.  சிறிது நேரத்திற்கு பிறகு பொறுக்கமாட்டாமல் ஒரு சீடன் புத்தரைப் பார்த்துக்கேட்டான்.  “ சுவாமி நாம் வரும் வழியில் எத்தனையோ பேர் நம்மை ஏளனமாக பேசினார்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு கதவை அறைந்து சாத்தினார்கள்.  ஆனால் நீங்கள் ஏன் எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருந்தீர்கள்? நீங்கள் அமைதியாக இருந்த்தால் அவர்களை எதிர்த்து எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை  உங்களது மௌனத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம். ‘

அதைக் கேட்ட புத்தரின் உதடுகளில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.  “ சீடர்களே அவர்கள் என்னை ஏளனப்படுத்தியதை இழிவாகப் பேசியதை நான் ஏற்றுக்கொள்ளவே இல்லையே.  அதை ஏற்றுக்கொண்டிருந்தால் தானே அவர்கள் மீது கோபப்பட்டிருப்பேன்  ஆத்திரத்துடன் பேசியிருப்பேன். அவர்களது பேச்சை நான் உள்வாங்கிக் கொள்ளாத நிலையில் நான் எதற்காக அவர்களை வெறுக்கவேண்டும்? பேசுபவர்கள் பேசட்டும்  நாம் தொடர்ந்து நம் பணியைச் செய்வோம். யாரையும் வெறுக்கத் தேவையில்லை “ என்றார்.  தமக்கே உரித்தான மென்மையான குரலில் சீடர்கள் புரிந்து கொண்டனர்.

Advertisements

2 thoughts on “புத்தரின் போதனை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s