நியூ[ஸ்]மார்ட்

முத்துமணி ஆடை!
படத்திலுள்ளது, 2551ம் ஆண்டில் எகிப்து நாட்டில் வாழ்ந்த ஒரு ராணியின் ஆடை! இந்த ஆடையில், 7,000 முத்துமணிகள் உள்ளன. இந்த ஆடையை கண்டுபிடித்து, அதை சரி செய்ய மட்டும், மூன்று ஆண்டுகள் ஆனது. அமெரிக்காவில், பாஸ்டன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், இந்த முத்துமணி ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொக்காரோ டின்னர் செட்!
டின்னர் செட் எல்லாம் தற்காலத்து நாகரிகம் என்று நினைக்கிறோம் அல்லவா… அதுதான் இல்லை.
கி.பி., 500 – 550களிலேயே, ‘பொக்காரே வேர்’ எனும் பெயரில், டின்னர் செட் பயன்படுத்தியுள்ளனர்.
சிகாகோவில், ‘ஆர்ட் இன்ஸ்டி டியூட்’டில், அக்காலத்தில் பயன்படுத்திய டின்னர் செட்டை காட்சிக்கு வைத்துள்ளனர். இதில், டிரேவை தவிர, 10 அயிட்டங்கள் இருக்கிறது.

மூக்கு பொடி குப்பி!
படத்தில் காணப்படும் இந்தக் குப்பி கடந்த,18ம் நூற்றாண்டில் சீனர்கள் பயன்படுத்தியது. எதற்கு தெரியுமா… மூக்குப் பொடியை போட்டு வைக்க!
நம்ம ஊர் மூக்கு பொடி டப்பா ஞாபகம் வருதுங்களா?

உலகிலேயே பழமையான காற்றாலை!
உலகிலேயே மிகவும் பழமையானது, ஈரான் நாட்டில் உள்ள, நஷ்டிபேன் என்ற இடத்தில் உள்ள காற்றாலை. ஆயிரம் ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த அதிசய காற்றாலை, களிமண், வைக்கோல் மற்றும் மரங்களால் கட்டப்பட்டது. ஆபத்து காலங்களில், அதிவேக காற்றை வெளியேற்றி, எதிரிகளிடமிருந்து, சுற்றியிருந்த கிராமங்களை இந்த காற்றாலை பாதுகாத்ததாக கூறுகின்றனர்.

குகைக்குள் புத்தர் சிலைகள்!
சீனாவில் உள்ளது, ‘லாங்மென்’ குகை; இங்கு, லட்சக்கணக்கான புத்தர் மற்றும் அவரது சீடர்களின் சிலைகள் உள்ளன; இங்கு வரும் சுற்றுலா பயணிகள், அழகாக வடிவமைக்கப்ட்டுள்ள இச்சிலைகளை கண்டு, மெய் மறந்து ரசிக்கின்றனர்.

Advertisements

One thought on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s