விபூதியை 3 விரல்களால் நெற்றியில் பூசுகிறோம். இதற்கு சிவ ஆகமங்கள் உள்ளன. 

அசுர, உகர, மகரங்கள் சேர்ந்த 3 மந்திரங்களையும் முறையே அநாமிகை, மத்யமை, தர்ஜன் ஆகியவற்றில் தியானித்துத் தரித்தல் எனக் கூறும் அதிதேவதை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஆவர்.

விபூதி இடும் போது கல்வி அறிவால் உயர்ந்தோர், ஏழங்குல அளவிற்கும், ஆளும் தகுதி படைத்தோர் ஆறங்குல அளவும், வியாபாரிகளும், மற்றவர்களும் மூன்று அங்குல அளவும், பெண்கள் ஒரே அங்குல அளவும் இட்டுக்கொள்ள வேண்டும்.

திருமண் இட்டுக் கொள்ளும் போது பெருவிரலால் தரிக்கின் வலிவைத் தரும். சுட்டு விரல் சொர்க்கத்தை கூட்டும். நகத்தால் தரிக்கக் கூடாது. திருமண்ணை இட்டுக் கொள்ளும் போது, தீச்சுவாலைப் போலவும், மூங்கில் இலை போலவும், தாமரையின் அரும்பு போலவும், இதழ் போலவும் மீனைப் போலவும் தரிசித்தல் நன்று.

விபூதியைக் குழைத்து நமது உடலில் எந்தெந்த இடங்களில் பூசிக் கொள்ள வேண்டும் தெரியுமா?

மொத்தம் 16 இடங்களில் பூசிக் கொள்ள வேண்டும் என ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவை, தலை, நெற்றி, மார்பு, தொப்புள், முழந்தாள் இரண்டு, தோள் இரண்டு, முழங்கை இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு மற்றும் கழுத்து ஆகியவை ஆகும்.

வலது கைகளில் இருந்து இடதுகைக்கு  சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
– அகத்திய வாத சௌமியம்.

வீபூதி ….மூன்று கோடுகளின் மகிமை ..!!

முதல் கோடு ……
அகாரம்,  கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.

இரண்டாவது கோடு …….
உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.

மூன்றாவது கோடு ……..
மகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.

ஆலயங்களில் நாம் பூசிக் கொள்ளும் வீபூதி என்பது சாம்பலில் உருவாகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இந்த ஒட்டுமொத்த உலகமே எரிக்கப்பட்டால் கூட, இறுதியில் கிடைப்பது சாம்பல் தான் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் சிவன் தனது உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டார் என கருதப்படுகின்றது. அதுவும் சுடுகாட்டிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சாம்பலை சிவன் உடலில் பூசினார் என ஆன்மீக கதைகள் குறிப்பிடுகின்றன.
நம் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு, விபூதி குங்குமம் வைத்துக் கொள்வதென்பது ஒருவித தொழில்நுட்பமாகும். குறிப்பாக சுடுகாட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாம்பலுக்கு வேறுவிதமான தன்மை இருக்கிறது. குறிப்பிட்ட சில ஆன்மீகப் பயிற்சிகளுக்கு அந்த சாம்பல்தான் பொருந்தும்.
ஆனால் அதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள நாம் தயார்நிலையில் இல்லை என்பதால், பொதுவாக வேறு முறைகளில் விபூதி தயார் செய்யப்படுகிறது.

மனதை ஒரு குறிப்பிட்ட விதத்தில் கையாளும்போது, அதே மனம் அனைத்திற்குமே தீர்வாக இருக்கும். மனதை இன்னொரு விதத்தில் கையாளும்போது, அதுவே பூமியில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிடுகின்றது. எனவே மனிதனுக்கு மனம்தான் தீர்வு.

மனம் என்பது எமக்கு ஒரு பிரச்சனையாக இல்லாமல், ஒரு தீர்வாக இருக்க வேண்டும். மனம் சமநிலையோடும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் நாம் இந்த விபூதியை (சாம்பலை) பூசும்போது, அது எமது மனதில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்மூலம் எமது மனதினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.எனவே மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் வீபூதி செயற்படுகின்றது எனலாம்.

குங்குமம் என்பது மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் புனிதமானது என்று நம் கலாச்சாரத்தில் கருதப்படுகிறது. மஞ்சளிற்கு என்று ஒரு சிறப்புத்தன்மை உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்வது நம்முடைய நல்வாழ்விற்கு மிகவும் முக்கியம்.

உடல், மனம், சக்திநிலை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது. இவ்வாறான விடயங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு மற்றும் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு, விபூதி குங்குமம் வைத்துக் கொள்வதென்பது ஒருவித தொழில்நுட்பமாகும்.

Advertisements

2 thoughts on “விபூதியை 3 விரல்களால் நெற்றியில் பூசுகிறோம். இதற்கு சிவ ஆகமங்கள் உள்ளன. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s