பரவசம் தரும் பர்வத மலை

பர்வதமலை என்றால் மலைகளுக்கு எல்லாம் மாமலை என்று பொருள்.  திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது பர்வத மலை.  3000 அடி உயரம் கொண்ட இந்த மலைக்கு இரண்டு வழிகளில் செல்லலாம்.  கடலாடி என்ற ஊர் அருகே இருந்து செல்ல ஒரு வழி   மாதிமங்கலத்தில் இருந்து செல்ல மற்றொரு வழி உண்டு.

கடலாடி வழியில் சென்றால் 5 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு நடைபாதையாகத்தான் செல்லவேண்டும். வழி முழுவதும் காட்டுப் பாதையாக உள்ளது.  காட்டு வழிப்பாதை முழுவதும் பசுமையான மரங்கள் செடி கொடிகல் உடலுக்கு நலம் பயக்கும் மூலிகைக்காற்று நம்மைப் பரவசப்படுத்தும்.  மலையில் நமக்கு ஆச்சர்யம் காத்திருக்கும்..    700 அடி உயர நீண்ட நெடிய மலை உச்சிக்குச் செல்ல நாம் கடப்பாரைப் படி தண்டவாளப் படி ஏணிப்படி ஆகாயப்படி போன்றவற்றில் பயணிக்கவேண்டும்.

மலை உச்சியில் இருக்கிறது திருக்கோவிலும் ஆசிரமும்.  முகப்பில் கொடிமரம்  பலி பீடம்  இவற்றுடன் அமைந்துள்ள திருக்கோவிலில் நமக்கு திருக்காட்சி தருபவர்கள் வினாயகர்  வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமாள்   அங்கேயே வீரபத்திரரும் மகாகாளியும் அருள்பாலிக்கின்றனர்.  நாம் மலை மீது கால்வலிக்க நடந்து வந்த களைப்பு இங்கு நிலவும் அமைதியில் கரைந்து போகிறது.  இந்தத் திருக்கோவிலில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் பக்தர்கள் தங்கள் கையாலேயே அபிஷேகம் செய்யலாம்  தேங்காய் உடைத்து தீபாரதனை காட்டலாம்

தல வரலாறு

இத்திருக்கோவில் பல நூரு ஆண்டுகளுக்கு சித்தர்களால் உருவாக்கப்பட்டது.  சித்தர்கல் தூண்களை மட்டுமே நிறுத்தி அதில் இறைவன் திருமேனியை வழிபட்ட இடம். இமயத்திலிருந்து ஈசன் தென் பகுதிக்கு வரும்போது காலடி வைத்த தலம்.  ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையை எடுத்து வந்தபோது அதிலிருந்து வந்து விழுந்த ஒரு துளியால் உருவான மலை என்றெல்லாம் கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன.

கி பி 3ம் நூற்றாண்டில் போளூர் செங்கன்ம சேயாறு ஆகிய பகுதிகளை ஆண்ட மன்னன்  நன்னன் நல்லாட்சி நடத்திய இவன் தான் தூண்கள் மட்டுமே இருந்த இடத்தில் திருக்கோயிலை உருவாக்கியதாக ஒரு வரலாறு.  நன்னனின் புகழை புற நானூறு குறுந்தொகை பதிற்றுப்பத்து மதுரைக் காஞ்சி மலைபடுகடாம் ஆகிய நூல்கல் பறைசாற்றுகின்றன.

இம்மலையில் சித்தர்கல் வாழ்ந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அம்மன் சன்னதிக்கௌ எதிரே அகத்தியர் மற்றும் போகரின் திருவுருவச் சிலைகள் உள்ளன. குரு நமச்சிவாயர் குகை நமச்சிவாயர் உள்ளிட்ட மஹான்கள் பர்வத மலையில் தங்கி கரு நொச்சி உண்டு யாகம் செய்து வாலிபம் பருவம் எய்தினர் என்று கூறப்படுகிறது.

பௌர்ணமி நாட்கலில் இங்கு பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. இரவு நேரத்தில் மலையேறி இறைவனைத் தரிசித்து அங்கேயே தங்கி மறு நாள் வருகின்றனர். பர்வத மலைக்குச் சென்றால் அங்கே இயற்கையும் இறைவனும் அருளும் பரவசத்தைக் கண்டு நெஞ்சில் சுமந்து வரலாம்.  பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் அது பூமியில் 365 நாட்கல் பூஜை செய்த பலனுக்கு சமம் என நம்பப்படுகிறது.

குறிப்பு

பர்வத மலை செல்லும் பக்தர்கள் உணவு தண்ணீர் எடுத்துச் செல்வது அவசியம்  ஏனெனில் மலையில் தண்ணீர் மின்சாரம் கிடையாது.  ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கும்போது தாகம் நீங்க மட்டும் போதுமான தண்ணீரை வழங்குகிறார்கள். இது மழை பெய்யும் போது பிடித்து வைக்கப்படும் தண்ணீர் இரவு நேரத்தில் படுத்துறங்க ஆசிரமத்தில் இடம் தருகின்றனர். முதியவர்கள் அங்கு செல்வது சற்று கடினம்  அப்படி செல்ல விரும்புவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி செல்வது சிறந்தது.

இங்கு சித்ராபௌர்ணமி ஆடி 18  ஆடிப்பூரம்  புரட்டாசி  ஐப்பசியில் அன்னாபிஷேகம் கார்த்திகை தீபம் மாசி சிவராத்திரி பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கல் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

Advertisements

2 thoughts on “பரவசம் தரும் பர்வத மலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s