கோயில் நகைகளை காக்கும் யக்ஷிகள்

ஏழிலை பாலை என்று தமிழிலும் பாலா என மலையாளத்திலும் அழைக்கப்படும் மரம்  [ BOTANICAL NAME    ALSTONIS SCHOLARIS ] சுமார் 40 அடி உயரம் வரை வளரக்கூடியது. இம்மரத்தில் ஏழு ஏழாக  இலைகள் கொத்தாக ஒரு கணுவில் துளிர்க்கும். ஏழிலைப் பாலையின் பூக்கள் மயக்கும் நறுமணத்தை தர வல்லவை. இலைகளின் மேற்பகுதி பள பளவென்றும் கீழ் பகுதி சாம்பல்  நிறத்திலும் இருக்கும். இந்த மரத்தின் வேர் முதற்கொண்டு இலைகள் மலர்கள் விதைகள் வரை அனைத்தும் கடும் விஷத்தன்மை வாய்ந்தவை. ஒரு துளி விஷம் நாக்கில் பட்டாலே உயிரினங்கள் மரித்துவிடும்.

இம்மரத்தில் தான் யக்ஷிகள்  உறைவதாக கேரள மக்கள் நம்புகிறார்கல். சாதாரணமாக யக்ஷிகள் மனிதர்களுக்கு கட்டுப்படுபவை அல்ல.  ஆனால் கோயிலின் கருவறை மூர்த்தங்களையும் நகைப் பெட்டகங்கள் பொக்கிஷங்களையும் பாதுகாக்க யக்ஷிகளை அவர்களுக்குப் பிடித்த படையலை வைத்து அழைத்து நைச்சியமாக மந்திரக்கட்டை போட்டு கோயிலுக்கு காவலாக வைத்துக்கொள்ளும் பழக்கம் நூற்றுக்கணக்கான வருடங்களாக கேரளாவில் வழிவழியாக இருந்துள்ளது.  இப்படி கோவிலுக்கு காவலாய் இருக்கும் யக்ஷிகளை மீறி யாரும் கோயில் நகைகளையோ பெட்டகங்களையோ திருடவே முடியாதாம்.

ஸ்ரீ பூர்ணத்ரயேஸர் கோயிலில் வீற்றிருக்கும் யக்ஷியின் பெயர் கல்யாண யக்ஷி  திருமணத்தடை இருந்தால் வேண்டிக்கொண்டு திருமணம் கூடி வந்தபின் இவளுக்கு படையல் வைக்கிறார்கள். கோயிலின் மேற்கு வாயிலுக்கு வெளியே உள்ள ஏழிலைப் பாலையை தனது இருப்பிடமாக்க் கொண்டுள்ள இவளை வணங்கி அனுமதி கேட்டுவிட்டுத்தான் ஸ்ரீ பூர்ணத்ரயேஸர் கோயிலுக்குள் நுழையவேண்டும் என்பது ஐதீகம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s