நியூ[ஸ்]மார்ட்

ஒரிசாவில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி லலித் ப்ரசிதா அண்மையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மானிலத்தில் நடைபெற்ற கூகுள் அறிவியல் கண்காட்சியில் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கான கம்யூனிட்டி இம்பாக்ட் விருதினைப் பெற்றுள்ளார். வீணாக்கப்படும் சோளக்கதிரின் வெளிப்பகுதியிலிருந்து சுத்தமான குடி நீரை வடிகட்டும் எளிய பிஃல்டர் ஒன்றை உலகிலேயே முதன்முறையாக உருவாக்கியுள்ளார்  இதற்காக இவருக்கு 10000 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மூன்றரை வயது சிறுமியான நேத்ரா தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த இவர் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 4 வயதுக்கு உட்பட்டோருக்கான 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவில் முதல் இடம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து பங்கு பெற்ற முதல் சிறுமி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

அயர்லாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் லியோ வரத்கர் பொறுப்பேற்க உள்ளார். 38 வயதான டாக்டர் லியோ வரத்கர் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியான பைன்கேயல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இவரது தந்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் அசோக் இவரது தாய் அயர்லாந்து  நாட்டைச்சேர்ந்த மிரியம் லியோ வரத்கர். டிரினிட்டி மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவப்பட்டம் பெற்றவர். அந்த நாட்டின் சமூகப்பாதுகாப்பு சுகாதாரம் போக்குவரத்து விளையாட்டு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மந்திரி பதவி வகித்துள்ளார்.

இன்னும் 8 ஆண்டுகளுக்குள் பெட்ரோல் டீசல் கார்கள் அரிதாகிவிடும் என்கிறார்கள் வாகன பயன்பாடு குறித்த ஆராய்ச்சியை ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் அண்மையில் நடத்தியுள்ளது. அதன்படி 2030ம் ஆண்டிற்குள் உலக கச்சா எண்ணெய் விற்பனை முற்றிலுமாக முடிவுக்கு வந்து விடும் என்றும் ஏற்றுமதி இறக்குமதி செலவினங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு உலக  நாடுகள் பெட்ரோல் டீசல் பயன்படுத்துவதை நிறுத்திவிடும் என்றும் தெரியவந்துள்ளது. எலகட்ரானிக் வாகனங்களே பயன்பாட்டிலிருக்கும்.  2025ல் பஸ்கள் டிராக்டர்கள் வேன்கள் கார்கள் என அனைத்து வாகனங்களும் எலக்ட்ரானிக்  மயமாக மாற்றப்படும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தில் நடைப்பெற்ற உலக்க் கோப்பை வாள் வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றார். இங்கிலாந்து வீராங்கனையான சாரா ஜேன் ஹாம்ப்சனை 15—13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச வாள் வீச்சுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

ஸ்வீடனில் இருக்கும் எபிசென்டர் என்ற தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றி தன் ஊழியர்களின் கைகளில் சிறிய அரிசி அளவுள்ள மைக்ரோ சிப்பைப் பொருத்தி வருகிறது.  கண்காணிப்பு கேமராவைவிட இது இன்னும் துல்லியமான ஊழியர்களை கண்காணிக்கிறது.  மைக்ரோசிப்பை எளிதாக உடலில் வலியின்றி ரத்தமின்றி நுழைத்துவிட முடியும். எதிர்காலத்தில் கடன் அட்டை  சாவிகளுக்கு பதிலாக இவையே உபயோகத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.  காலப்போக்கில் உடலுக்குள் வைக்கக்கூடிய மைக்ரோ சிப் தவிர்க்க இயலாததாக மாறிவிடும் என்கிறார்கள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s