அழகர் வைகையில் இறங்குவது ஏன்?

வைகை ஆறு இன்று போல் அன்றில்லை.  இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக்குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு.  இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்..

அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை சிவனால் உருவாக்கப்பட்டது.  தனது திருமணத்திற்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது  இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்குத்தான் ஆசை வராது.  பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே. இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது.

வைகையில் ஒரு முறை மூழ்கி எழுந்தாலே செய்த பாவம் நீங்குமென்றால் அங்கேயே பல நாள் மூழ்கிக் கிடந்தால் பிறவியே இல்லாமல் செய்து விடலாமே  நதியில் மூழ்கினால் கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார்.

அதற்கேற்றாற்போல் மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்து விட்டது.  ஏ சுதபஸ் நீ மண்டூகமாக போ   இந்த நதியில் மூழ்கிக்கட  என்று சாபமிட்டார்.  சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது  ஏன் ………………….மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும்  மச்சமாகப் போ  என சாபம் பெற்றிருக்கலாமே      மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும்  தவளை என்றால் தண்ணீர் தரை என எங்கும் வாழலாம்.  முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்ய்ம்  அவர்கள் செய்த தவத்தின் பலன் அது.   சுதபஸ் அன்று முதல் மண்டூக்ர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார்.  மிக நீண்ட காலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது கரைக்கு வருவார்  காரணம் என்ன/

எம்பெருமானான சுந்தர்ராஜர் அழகர் மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி …………………அல்லது சாப விமோசனம்.  ஒரு வேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல் கரை வழியே கடந்தால் துள்ளிக்குதித்து வீழ்ந்தாவது  அவர் திருவடியில் விழுந்து விடலாமே என்ற எண்ணம்

பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்.  ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம்  பெருமாளின் திருவடியைத்தான் முதலில் பார்க்கிறோம்.  பிறகு தான் கமலம் போன்ற முக அழகை தரிசிக்கிறோம். அந்தத் திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம்.

பார்த்தாலே இப்படி என்றால் …………………திருவடி பட்டால் என்னாகும்.  அழகர் கோவிலில் இருந்து சுந்தர ராஜப்பெருமாள் குதிரையில் ஏறி வந்தார்.  வைகையைக் கடக்கும்போது அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது.  சுய உருவைப் பெற்றார்.  ஆஹா பெருமாளே  இனி எனக்கு மோட்சம் தானே  என்றார் மண்டூகர்.   அடேய்  பார்டா  இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய்  என்றார் பெருமாள்.  மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார்.  ஆம் திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய்விட்டார்.  நமக்கும் அதே நிலைதான்.

அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக வைகைக்குள் இருக்கும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியை தரிசித்தாலே போதும்  பூலோகத்திலேயே சொர்க்கத்தை காணலாம்.  ஆம்  மனதார அவரிடம் பிரார்த்தித்தால் போதும்  எல்லாம் நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் இருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s