குளிர்ச்சி தரும் குளு குளு செம்பருத்தி

கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும் அற்புதமான மலர் செம்பருத்தி. இது மலேசியா நாட்டின் தேசிய மலர். செம்பருத்தி பல வண்ணங்களில் அடுக்குகளாக காணப்பட்டாலும் 5 இதழ்களை கொண்ட ஒற்றை அடுக்கு சிவப்பு நிற செம்பருத்தி பூவே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

செம்பருத்தியின் இலை பூ வெந்தயம் வெட்டிவேர் கருவேப்பிலை போன்றவற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி தலைமுடியில் தடவிவர கூந்தல் செழித்து வளரும்.

சிறிதளவு செம்பருத்திப் பூ மற்றும் இலைகளை எடுத்து 200 மிலி தண்ணீரில் காய்ச்சி ஆறியதும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அதனுடன் கடலை மாவைச் சேர்த்து தலைமுடியில் தடவி வந்தால் முடி கருமையாக பளபளப்பாக இருக்கும்.  செம்பருத்தி இலைகள்  பூ மொட்டு போன்றவற்றை நீர் சேர்த்து கஷாயம் செய்து அதனுடன் பன்ங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் எரிச்சல் சிறு நீர் கடுப்பு நீங்கும்.

செம்பருத்தி பூவுடன் நீர் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி சீரகப் பொடியும் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் இதயம் பலப்படும். ரத்தக்கொதிப்பு குறையும். செம்பருத்திப் பூச்சாறுடன் சர்க்கரையும் எலுமிச்சைச் சாறும் சேர்த்து அருந்த உடலுக்குக் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

Advertisements

One thought on “குளிர்ச்சி தரும் குளு குளு செம்பருத்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s