ஆன்மிகத் துளிகள்

முருகனிடம் நேரடியாக பிரணவ உபதேசம் பெற்றவர்கள்  தேவர்களில் சிவபிரான்.  ரிஷிகளில் அகத்தியர்.  மனிதர்களில் அருணகிரி நாதர்.

அயோத்தி திருப்புல்லாணி சீராம விண்ணகரம்  எனும் சீர்காழி  புள்ள பூதங்குடி  திருவெள்ளியங்குடி திருப்புட்குழி  திருவள்ளூர் ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களில் ஸ்ரீராமர் மூலவராக எழுந்தருளியுள்ளதால் அவை சப்த ராம திருத்தலங்கள் எனப் பெயர் பெற்றுள்ளன.

ஆந்திர மானிலத்தின் சிம்மாச்சலம் என்ற திருத்தலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மரை ஆண்டுக்கு ஒரு முறைதான் முழுமையாகத் தரிசிக்க முடியும்.  வைகாசி விசாகத்தன்று மாத்திரமே முழுமையாகக் காட்சியளிக்கிறார். மற்ற நாட்களில் சந்தன காப்பிட்டு மறைக்கப்பட்டிருக்கும்.

திருமலைராயன் பட்டினத்தில் மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி திருவிழா வெகு பிரசித்தம்.  அன்ரு திருக்கண்ணபுரம் சௌரிராஜர்  திருமருகல் வரதராஜர் திருமலைராயன் பட்டினம் வெங்கடேஸ்வரர் ரகு நாத பெருமாள் ஸ்ரீவிழி வரதராஜ பெருமாள்  நிரவிகரிய மாணிக்க பெருமாள்  காரை கோவில் பத்து நித்யபெருமாள்  ஆகிய பெருமாள்களை ஒரே நேரத்தில் திருமலைராயன்பட்டினத்தில் தரிசிக்கலாம். அந்த ஊர் மீனவர்கள் சௌரிராஜப் பெருமாளை மாப்பிள்ளை என வரவேற்று மகிழ்கின்றனர்.  வலை நாச்சியாரை மணம் புரிந்த தால் சௌரிராஜனுக்கு இந்த பெயர் வந்ததாம்

ஜவ்வாது மலைதொடரில் மரம் செடி கொடிகல் அடர்ந்த காட்டுப்பகுதியில் இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளதுதான் பாப்பாத்தி அம்மன் ஆலயம்..  இந்த அம்மன் கோவிலுக்கு அருகே ஒரு சிறிய குளம் உள்ளது.  வறட்சியான வெயில் காலத்தில் கூட இந்தக் குளத்தில் நீர் நிரம்பி வழிந்தோடுவதே இதன் அதிசயமாகும்.  எனவேதான் இந்தக் குளத்தை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன் பாட்டில்களில் இதன் தண்ணீரை எடுத்துச் சென்று நம் வீடும் நிலமும் இதுபோன்று செழிப்பாக இருக்கவேண்டும் எனத் தெளிக்கின்றனர். பசு மாடு கன்று ஈன்று கறக்கும் முதல் பாலை இக்குளத்தில் எடுத்து வந்து ஊற்றுகின்றனர். வற்றாத இக்குளத்து நீர்போல எப்போதும் வீட்டில் பால் குறையாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். வேலூர் மாவட்ட திருப்பத்தூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது ஆண்டியப்பனூர் கிராமம் இங்கிர்ந்து கிழக்கே 2 கிமீ தொலைவில் உள்ளது இந்த ஆலயத்தின் நீர்த்தேக்கம்..

Advertisements

2 thoughts on “ஆன்மிகத் துளிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s