படித்தால் தானே பயன்

வீட்டுக்கு வந்த தந்தை பொருட்கள் அங்குமிங்கும் வாரி இறைந்து கிடப்பது கண்டு அம்மாவிடம் சத்தம் போட்டார். இதுதான் வீடு வச்சிருக்கிற அழகா வீட்டை சுத்தமா வச்சாதானே லட்சுமி தங்குவா  வீட்டிலே எத்தனை பேர் இருக்கீங்க  எங்க உன் புத்திர சிகாமணி  அவன்கிட்டே சொன்னா கூட ஒழுங்குபடுத்த மாட்டானா?   என்று கத்தி தீர்த்தார்.

சற்று நேரத்தில் மகன் வந்தான்.  அப்பாவின் கோபத்திற்கான காரணத்தை அறிந்தான்  வேகமாக வேலை நடந்தது. பழைய பொருட்களை எல்லாம் ஓரம் கட்டினான். புதுசை ஒழுங்காக அடுக்கினான்.  வீடு சுத்தமானது  பழைய பேப்பர்களுடன் ஒரு பகவத்கீதை புத்தகமும் இருந்த்து.  அதை தந்தை பார்த்து விட்டார்.

ஏன்டா  முட்டாள்  நாம்  உயிராய் மதிக்கிறது  இந்த புத்தகம்.  இதைப் போய் பழைய பேப்பரோட சேத்துட்டியே என்று கத்தினார்.

அப்பா  நீங்க சொல்றது சரி தான்.  இதை நீங்களோ அம்மாவோ வீட்டிலே இருக்கிறே மத்தவங்களோ ஒரு நாளாச்சம் புரட்டி பார்த்த்துண்டா   படிக்காத புத்தகம் பழை புத்தகக்கடைக்கு தானே லாயக்கு……………….. என்றதும் பகீரென்றது தந்தைக்கு.  மகனின் சொல்லில் இருந்த உண்மையை உணர்ந்தார். அன்று முதல் தினமும் ஆளுக்கொரு ஸ்லோகம் படித்து விளக்கம் அறிந்து கொண்டனர்.

 

Advertisements

2 thoughts on “படித்தால் தானே பயன்

    1. கணவன் – மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில், அவர்களினிடையே ஒரு ஒளிவு, மறைவு இருந்தது கிடையாது. ஆனாலும், மனைவி, கணவனிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தாள். அதாவது, அவள் பரண் மீது வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதைக் கணவன் பார்க்கவும் கூடாது, அதைப் பற்றி ஏதும் கேட்கவும் கூடாது. கணவனும் அதை மதித்து அதுபற்றி ஒன்றும் கேட்டதில்லை.

      மரணப் படுக்கையில் மனைவி கிடக்கும்போது, கணவனிடம் சொல்லுகிறாள்: “உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். அந்தப் பரண் மீது நான் வைத்திருக்கும் அட்டைப் பெட்டியை தயவுசெய்து எடுத்து வாருங்கள்”.

      அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்குமாறு கணவனிடம் சொல்லுகிறாள். கணவன் திறந்து பார்க்கிறான். உள்ளே, அவள் கையால் உல்லன் நூலால் பின்னிய இரண்டு பொம்மைகளும், ஒரு லட்ச ரூபாயும் இருக்கின்றன. அதன் விவரம் என்னவென்று கணவன் கேட்கிறான்.

      மனைவி விளக்கினாள்: “நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது, என்னுடைய பாட்டி எனக்கு ஒரு அறிவுரை சொன்னாள். நல்ல மகிழ்வான திருமண வாழ்க்கை வாழ்வதற்கு, நான் எதற்காகவும் உங்களிடம் எந்த ஒரு விவாதத்தையும் தவிர்க்க வேண்டும் என்றாள். அந்தத் தருணங்களில் எனக்குக் கோபம் வந்தால், அதனை அடக்க, உல்லன் நூலையெடுத்து பொம்மை வடிக்கச் சொன்னாள். அதையே நான் கடைப்பிடித்து வந்தேன்”.

      மகிழ்ந்து போனான் கணவன். ‘இரண்டே இரண்டு பொம்மைகள் மட்டுமே! அப்படியானால், அறுபது ஆண்டு மண வாழ்வில், மனைவி இரண்டு முறைகள் மட்டுமே கோபப்படும்படி நான் நடந்திருக்கிறேன்!’

      கொஞ்சம் பெருமையுடன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

      “அது சரி, இந்த ஒரு லட்ச ரூபாயைப் பற்றியும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுவாயா?” கணவன் கேட்டான்.

      மனைவி சொன்னாள்: “ஓ, அதுவா? அது, நான் செய்த மற்ற பொம்மைகள் அனைத்தையும் விற்று வந்தப் பணம்!”

      😀😛

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s