நியூ[ஸ்]மார்ட்

விருது நகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் பள்ளி மாணவி சுபஸ்ரீ  கடந்த மே மாதம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பள்ளி மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் 10 முதல் 12 வயது பிரிவில் பங்கேற்றார். 500 மீட்டர் தூரத்தை 56 நொடிகளிலும்  ஆயிரம் மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களிலும் கடந்து இரு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.

கொரியாவைச் சேர்ந்தவர் லீ-காங்பின்  இவர் காப்பியில் ஓவியம் தீட்டும் ‘ லாட்டே ‘ எனப்படும் கலையில் மிகச்  சிறந்த கலைஞர்.  ஒரு கோப்பை காப்பியில் சில நிமிடங்களுக்குள் ஓவியங்களாகத் தீட்டி விடுகிறார்.  உலகம் முழுவதும் நடைபெறும் லாட்டே போட்டிகளில் பரிசுகளையும் அள்ளி வருகிறார்.  சிறிய உலோக்க் கம்பியையும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நிறங்களையும் வைத்து புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் விலங்குகள் மனிதர்கள் பூக்கள் என்று ஓவியங்களைத் தீட்டி பிரமிக்கவைக்கிறார்.

உலகிலேயே மிகப்பெரிய செங்குத்தான தோட்டம் கொலம்பியாவின் போகோட்டா நகரின் மத்தியில் இருக்கிறது.  தாவரங்களால் சூழப்பட்ட 11 மாடிக்கட்டிடம் எடிஃபிசியோ சாண்டலியா.  இதில் 33000 சதுடாடிக்கு தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஸ்பெயின் நிறுவனத்துடன் இணைந்து கொலம்பியாவின் க்ரான் கோல் நிறுவனம் உருவாக்கியுள்ள இதில் 10 வகைகளில் 1 15 000 தாவரங்கள் இருக்கின்றன.  பிரத்யேகமான பாசன முறையில் அதிகப்படியான நீர் மற்றும் கழிவு நீர் சுத்தகரிக்கப்பட்டு சுவர்களில் சேமிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இதனால் 3000 மனிதர்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான ஆக்சிஜனை இந்தத் தோட்டம் வழங்குகிறது.  தீங்கு விளைவிக்கக்கூடிய  2 ஆயிரம் டன் வாயுக்களையும்  400 கிலோ தூசிகளையும் வடிகட்டுகிறது.  745 கார்கள் வெளியிடும் கார்பனை சுத்தம் செய்கிறது.  கோடை காலத்தில் வீட்டுக்குள் செல்லும் வெப்பத்தின் அளவைக் குறைக்கிறது என்கின்றார்கள்.

ஆசிய மல்யுத்தப் போட்டியில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்றார்.  மகளிருக்கான 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உத்தாப்பிரதேச மானிலத் தலை நகர் லக்னோவில் இருக்கிறது  ஷீரோஸ் ஹேங் அவுட் கஃபே.  இங்கு பணிபுரியும் பெண்கள் அனைவரும் அமிலவீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்.  தங்கள் சுயத்தை இழந்து முடங்கிக் கிடந்தவர்களுக்கு நம்பிக்கை விதைத்து வாய்ப்பு வழங்கியிருப்பதே இந்த உணவகத்தின் சிறப்பு.  தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தும்  இந்த உணவகத்துக்கு மானில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை நேரடியாக உதவி செய்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மானிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள குடிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா.  106 வயதான இந்தப் பாட்டி கன்டிரி ஃபுட்ஸ் என்ற பெயரில் வயல்வெளிய்ல் திறந்த முற்றத்தில் பாரம்பரிய உணவுகளை விறகடுப்பிலேயே சமைத்து வருகிறார்.  அவற்றின் சுவைக்காகப் பாராட்டுக்களும் குவிகின்றன.  இவரது பேரன் யூ டியூபில் இவரது சமையலைப் பதிவேற்றம் செய்கிறார்.  யூ டியூபில் தனது சிறப்பான சமையல் தயாரிப்புக்களால் மூன்று லட்சம் சந்தாதாரர்களைப்பெற்றிருக்கிறார்.  இந்தியாவில் மட்டுமின்ரி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் ரசிகர்களைப் பெற்றவர். முட்டைக்கறி  சிக்கன் பிரியாணி  பாயா என நீளும் இவரது சமையல் பட்டியலில் அதிகப் பார்வையாளர்களை  பெற்றிருப்பது வாட்டர்மெலன் சிக்கன் தயாரிப்புதான்.  அவரது சமையலைப் போலவே அவரது தன்னம்பிக்கையும் துணிச்சலும் அடுத்த தலைமுறையும் அறிய வேண்டிய ஒன்று.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s