ரசமான விவாதம்

பெரியவாளின் சமையல் விளக்கம்.  குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே பருப்பு புளி உப்பு  சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு.

அங்கிருந்த பக்தர்கள் சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம் அதுதான் வித்தியாசம் என்றார்கள்.  மஹாபெரியவாள் சிரித்தார்.   குழம்பில் காய்கரி உண்டு. ரசத்தில் இல்லை  இதுதான் வித்தியாசம் என்றார்.  இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று  ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாக சொன்னாராம்.

அவர் சொன்னதின் கருத்து என்ன?  தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால் நாம் குழம்பிப் போகிறோம்  அதாவது சாம்பார் போல்  ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.  இவைகலை மறக்கக் கூடாது என்கிறத்துக்காகத்தான் தினமும் குழம்பும் ரசமும் வைக்கிறோம்.  நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு ரசம் பாயசம் மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?

இந்த உணவுக்கலாச்சாரம்  வேறு எங்கேயும் இல்லை.  மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் தான் என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.  அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.  இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு எடுத்துக்காட்டுகிறது. 

இது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது.  இவற்றை தொடர்வது இனிமை ஆனந்தம்

அவைதான் பாயசம் மோர் பட்சணம்,,,,,,  இதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்த்ததுடன்  நம் மனம் லயிக்க இது உதவுகிறது.   பாலிலிருந்து தயிர் வெண்ணெய் நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது. அதனால்தான் பரமாத்மாவைக் கலந்த பின் மேலே தொடர ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது.  அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?  என்று அன்றைய தினம் பெரிய பிரசங்கமே செய்துவிட்டார் மஹாபெரியவர்.

குழம்பு குழப்பம்தான்  அகங்காரம்

ரசம் தெளிவு

பாயசம் இனிமை

மோர் ஆனந்தம்

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை.

Advertisements

One thought on “ரசமான விவாதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s