அபிஷேகத் தத்துவம்

 

கோயிலுக்கு செல்கிறோம்  குருக்கள் ஏதோ அபிஷேகம் செய்கிறார்.  கும்பிட்டு வருகிறோம். ஆனால் அதன் தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

நம்மை காக்கும் கடவுளுக்கு முதலில் தூய நீர் மஞ்சள் நீர் ஆகியவற்றில் நீராயிடிய பின் பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் பன்னீர் விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது.

இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது நல்லது

தூய நீர்

தூய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் இறைவனிடம் வெளிப்படுத்துகிறோம்.

மஞ்சள் நீர்

மங்களமும் ஆரோக்கியம் பெருக வளம் கொண்ட வாழ்வைப் பெற மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பால்

களங்கமற்ற மனம் வேண்டி செய்யப்படும் அபிஷேகம் பாலாபிஷேகம்

சந்தனம்

தேயத் தேய சந்தனம் மணப்பது போல் பிறருக்காக உழைத்து வாழ்க்கையில் தியாகம் புரிவதைக் குறிக்கும்.

பன்னீர்

பன்னீர் போன்ற தெளிவு பிறக்கும் என்பதை குறிக்கும்.

விபூதி

இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல்தான் என்பதை விபூதி அபிஷேகம் உணர்த்தும்.

அர்த்தத்துடன் வழிபடுவோம்  த்த்துவத்தை புரிந்து கொள்வோம்  பலனை பெறுவோம்

 

.இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்

பலவிதமான வழிபாடுகளும் விரைவாக பலன் தரும் ஒன்று அபிஷேகம்.  ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்த்த்ந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

முக்தி கிடைக்க இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

தீர்க்காயுசுடன் வாழ சுத்தமான பசும்பாலால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.  குடும்ப ஒற்றுமை நீடிக்க குடும்ப ஒற்றுமைக்கும் குதூகலத்திற்கும் இறைவனை இள நீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்

நல்வாழ்க்கை அமைய நல்லெண்ணையில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது. கடன் தீர மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை நீங்கும்.

நினைக்கும் காரியம் நிறைவேற சுத்தமான நீரால் அபிஷேகம் செய்ய காரியசித்தி உண்டாகும்.  பிணிகள் தீர கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும். குழந்தை பாக்கியம் பெற நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய பலன் உண்டாகும்.

மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலுமிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்/

இனிய குரல் வளம் கிடைக்க இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும். பஞ்சாமிர்த்த்தில் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமில்லாமல் செல்வமும் பெருகும்.  அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.

பாவங்கள் கரைய பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால் நெய் தயிர் சாணம் கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

 

Advertisements

2 thoughts on “அபிஷேகத் தத்துவம்

  1. ஆலய அதிசயங்கள்!!

   1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

   2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

   3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

   4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

   5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.

   6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

   7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

   8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

   9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

   10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

   11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

   12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.

   13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

   14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

   15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

   16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.

   17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

   18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.

   19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

   20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

   21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

   22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

   மறக்காமல் பகிருங்கள் தெரியாதவர்கள் தெரிந்துகொள்வதற்கு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s