காகம் பற்றிய சில அபூர்வ தகவல்கள்

அதிகாலையில் எழுந்து கரைதல்.  உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல். உணவு உண்ணும்போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.   பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.  மாலையிலும் குளித்தல் பிறகு தங்குமிடத்திற்கு செல்லுதல் போன்றவற்றை வழக்கமாக்க் கொண்டவை.

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.  மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்  ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை.  ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று  நடக்கும் அசம்பாவிதங்கள்  விபத்துக்கள் வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.  செய்வினை  கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள்  நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது  உங்கள் முன்னோர் வழிபாடுதான்.  உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற் அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி  காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.  தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள்.  திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை  ஐந்து ஏழு ஒன்பது என்ற கணக்கி கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா………………….கா   என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.  அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.  அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.  வாழை இலையில் உள்ள் அன்னங்களை  சுவைக்கும்.  அப்படி சுவைக்கும்போது அந்த காக்கைகள் கா…………………கா,,,,,,,,,,,,,,,, என்ரு  கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டு சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.  இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.  இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.  மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.  இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.   காக்கை சனி பகவானின் வாகனம்  காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.   காக்கைகளில் நூபூரம்  பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை  என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாது.  எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.  அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். 

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.  தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா……………….கா…………. என்று பல முறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு. காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை  நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான்  எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

Advertisements

4 thoughts on “காகம் பற்றிய சில அபூர்வ தகவல்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s