என் நினைவூஞ்சல்

பல வருடங்களுக்குப் பிறகு பிறந்தகம் சென்றேன்

எந்த வயதிலும் பிறந்தகம் தரும் சுகம் அலாதிதான்

அதிலும் முன்னறையில் என்னை வரவேற்கும்

என் பிரியமான மர ஊஞ்சல்

எத்தனை நினைவுகள் அதில் உண்டோ

அப்பாவின்  மடியில் தலைவைத்து படுத்து

என்ன படிக்கவேண்டுமென கண்ட கனவுகள்

அம்மாவின் அரவணைப்பில் ஆடியபோது

அடுத்த நாள் மதியத்திற்கு என்ன உணவென்று கேட்க

தங்கைகளுடன் ஆடியதைவிட அதில் சங்கிலியைப் பிடிக்க

சண்டையிட்டது தான் அதிகம் என்பது நினைக்கு வர

என் பிரியமான தாத்தா அதில் வெற்றிலை செல்லத்துடன்

அமர்ந்து ஆடி எனக்கு சொன்ன மஹாபாரதக் கதைகள் என

பாட்டியுடன் அமர்ந்து சஷ்டி கவசம் கற்றுக்கொண்டது என

விடுமுறைக்கு வரும் அத்தை மாமா குழந்தைகளுடன்

போட்டி போட்டு வேக வேகமாக ஆடியது என

எத்தனை எத்தனை நினைவுகள்  ஊஞ்சலின் நினைவுகள்

என் மன ஊஞ்சலில் ஆடியவிதத்தை வருணிக்க

வார்த்தைகளை தேடுகிறேன்  கிடைக்கவில்லை.

Advertisements

4 thoughts on “என் நினைவூஞ்சல்

  1. I Completely agree with whatever you have penned about the swing amma:))) Indeed the experience is very positive swinging on a swing which no other furniture would give us.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s