மறந்து போன மகிமைகள்

 

நாகரிக வளர்ச்சியில் நாம் பல பழமையான விஷயங்களை இழந்து வருகிறோம். அதில் சில……….

திண்ணை வீடு

வீட்டின் முற்புறத்தில் இருக்கும் திண்ணைகள் இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் காணாமல் போய்விட்டன. முன்பெல்லாம் திண்ணை இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. வீட்டுக்கு வருபவர்கள் அமர்ந்து பேச சிறுவர் சிறுமியர் விளையாட தெருவோரம் நடந்து செல்பவர்கள் ஓய்வு எடுக்க திண்ணைகள் பெரிதும் உதவின.  திண்ணியில் தான் தாத்தா பாட்டிகளின் வாழ்விடமாகவும் இருந்தன. மழை நாட்களில் கால் நடைகளின் இரவு படுக்கையும் இங்குதான்.

பத்தாயம்

மரத்தாலான பெரிய பெட்டியே பத்தாயம் சுமார் 5—6 அடி உயரமும் 4 அடி அகலமும் இருக்கும்  இதில் திறந்து மூட கதவு உண்டு.  ஏணி வைத்து ஏறி நெல்லை கொட்டிவிட்டு பின் அடியிலிருக்கும் சிறு திறப்பு வழியாக நெல்லை எடுப்பார்கள்.  வருடம் முழுவதற்கும் தேவையான நெல் இதில் சேமிக்கப்படும். வாழ்க்கை முறை மாறியதில் பத்தாயத்து அவசியமின்றிப் போய்விட்டது.

முற்றம் வைத்த வீடு

வீட்டின் மையப்பகுதியே முற்றம் எனப்படுகிறது.  மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக சற்றுத் தாழ்வான பகுதியாக இருக்கும். ஆரோக்கியக்குச் சுத்தமான காற்று  மழை நீர் நல்ல வெளிச்சம் வீட்டுக்குள்ளே கிடைக்க நம் முன்னோர்கள் சிந்தித்து உருவாக்கியதே முற்றம்/  பாட்டி கதைகளை கேட்டபடி குடும்பமாக அமர்ந்து இரவு சாப்பிடுவதும் இங்குதான்.

கிணறு

அப்போது வீட்டுக்கு முக்கியமான ஒன்று கிணறு.  குளித்து மகிழ்ந்தவர்கள் பலர்.  மனிதனின் நண்பனாக கிணறு இருந்திருக்கிறது.  வயல் தோட்ட்த்தில் உள்ள கிணறு ஆண்களின் நண்பனாகவும் வீட்டின் கொல்லைப் பக்க கிணறு பெண்களுக்குத் தோழியாகவும் இருந்துள்ளது.  தங்களின் சந்தோஷங்களையும் சோகங்களையும் கிணற்றுடன் பகிர்ந்து கொண்டனர்.

உறி

தின்பண்டங்களை எறும்பிடமிருந்தும் பால் தயிர் அசைவ உணவுகளைப் பூனையிடமிருந்தும் இந்த உறியில் வைத்துத்தான் பாதுகாப்பார்கள்.  கண்ணன் வெண்ணையைத் திருடி தின்றது இந்த உறியிலிருந்துதான் என்பது வரலாறு.

சுமைதாங்கி கல்

சுமையுடன் நடந்து செல்வோர் வழியில் சுமையை இறக்கி வைத்து இளைப்பாற ஆங்காங்கே சுமை தாங்கிக் கல் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு கருங்கல்லை நிறுத்தி ஒரு கல்லை அதன் மேல் படுக்க வைத்திருப்பார்கள்.  சாலையில் நடந்து செல்லும் கர்ப்பிணி பெண்கள் இந்த கல்லில் அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வார்கள்.

Advertisements

2 thoughts on “மறந்து போன மகிமைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s