குட்டிச் செய்திகள்

ராபர்ட் கிளைவ் ஆட்சி செய்த காலத்தில் புனித டேவிட் கோட்டை கடலூரில்தான் கட்டப்பட்டது புகழ்பெற்ற வெள்ளிக் கடற்கரை விடுதலைப் போராட்டக் காலத்தில் மஹாகவி பாரதியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இடமான கேப்பர் மலை போன்றவை இங்குதான் உள்ளன.  இப்போது இந்த இடம் பாரதி நினைவு அருங்காட்சியகமாக விளங்குகிறது.   சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சமணர்கள் சைவர்கள் இடையே நடந்த சண்டையின் போது அப்படி அடிகளாரை கடலில் தூக்கிப்போட அவர் சிவபெருமானின் திருவருளால் உயிரோடு கரையேறியதை நினைவு கூறும் வரலாற்றுப் பெருமைகளையும் உள்ளடக்கியது இந்த ஊர்.

கோவில் நகரம் என்ற புகழ்பெற்ற கும்பகோணம்  தான்  இந்தியாவின் கேம்பிரிட்ஜ்   எங்கு திரும்பினாலும் கோவில்தான்.  இங்கு புகழ்பெற்ற யானை அடி என்ற இடத்தில் உள்ள அரசாங்கப் பள்ளியில்தான் மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் படித்தார்.  கணித மேதை இராமானுஜம் இந்தப் பகுதியில் வசித்த்தல் அவர் வசித்த வீட்டை இராமானுஜம் நினைவு இல்லமாக மாற்றியது அரசாங்கம். அவர் பயன்படுத்திய புத்தகங்கள் சாய்வு மேஜை உபயோகித்த கடிகாரம் பேனா எல்லாம் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  கும்பகோணம் காலேஜ் அந்த நாட்களிலேயே பிரசித்தி பெற்றது.  ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இங்கு ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். பல பிரசித்தி பெற்ற கலைஞர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மஹாமகம் இங்கு பிரசித்தம்.  மஹாமக குளத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

சாத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள இந்த தண்ணீர் தொட்டி  இந்த ஊரில் முக்கியமான ஒன்று    நீராவி எஞ்சின் இருந்த காலத்திலேயே தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயிலின் எஞ்சினைக் குளிர்விக்க இந்த தண்ணீர்த் தொட்டியில் இருந்து தான் நீர் ஏற்றுவார்கள்.  சென்னை போன்ற பெரு நகரங்களில் தான் இந்த வசதி இருக்கும்  ஆனால் பிரிட்டிஷ் காலத்தில் சாத்தூருக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இப்போதும் இந்திய ரயில்வேயின் பாரம்பரியமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஏறத்தாழ நூற்றாண்டை நெருங்கும் இந்த டேங்க் இப்பகுதியின் சின்னம்.

குபேரர்  கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வ செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும்.  விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவதுபோல் பணக் கஷ்டத்தால் நமக்கு வரும் இடையூறுகளை நீக்குவதை குறிக்கும் விதத்தில் கீரியை தாங்கியிருக்கிறார்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே  என்றொரு பழமொழி உண்டு. சுவைக்குக் காரணமான உப்பை குறைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்கிற்து சாஸ்திரம்   உப்புச்சத்து வந்தபின் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளலாம் என நினைப்பது தவறு.  சிறுவயதில் இருந்தே கார்த்திகை சஷ்டி பவுர்ணமி போன்ற விரத நாட்களில் உப்பு இல்லாமல் அல்லது குறைந்த அளவு உப்பு சேர்த்து சாப்பிடுவ்து நல்லது.  இதற்கு அலவண  நியமம் என்று பெயர்.  லவணம் என்பதற்கு உப்பு என்பது பொருள். உப்பில்லாத உணவைச் சாப்பிட்டு வருண மந்திரம் ஜெபித்தால் மழை பெய்யும் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார்.

கோவிலில் பூஜை நடப்பதை  மணியடித்து தெரிவிப்பது வழக்கம். சில பூஜையில் நந்தியின் உருவம்  பொறிக்கப்பட்ட மணியும் பெருமாள் பூஜையில் சங்கு சக்கரம் கருடன் பொறிக்கப்பட்ட மணியும் இடம் பெற்றிருக்கும். நைவேத்தியம் மூலம் தெய்வீக சக்தி எங்கும் பரவும். கடவுளின் முன் பிரசாதம் படைக்கும்போது  கடவுளே இந்த உணவு பொருள் எல்லாம் உன் அருளால் கிடைத்தவை என்பதை அறிவிக்கும் விதத்தில் மணி ஒலிக்கப் படுகிறது.  கவனச்சிதறல் ஏற்படாமல் மனம் முழுமையாக வழிபாட்டில் ஈடுபடவும் மணியோசை துணை செய்கிறது.  மணியுடன் சேர்ந்து பல்வேறு தேவையற்ற பேச்சோ அமங்கல சொற்களோ காதில் விழ வாய்ப்பு இல்லாமல் போகும்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s