உயர்பதவி தரும் உன்னத தலம்

சித்திரை மாதம் சித்திரை  நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி தினம்.  சித்திரா பௌர்ணமி ஒவ்வொரு மாதமும்  பௌர்ணமி வந்தாலும் சித்திரைப் பௌர்ணமிக்கு தனிச் சிறப்பு உண்டு. அன்று அதிகாலை நீராடி உங்கள் விருப்ப தெய்வத்தை வழிபட வேண்டும். சர்க்கரை பொங்கலை இறைவனுக்குப் படைத்து அதனை எல்லோருக்கும் வழங்கலாம். அன்று மாலை சந்திரன் உதிக்கும் நேரம்  கடற்கரை நதிக்கரை குளக்கரைகளில் உறவினர் நண்பர்களுடன் இனிமையாகப் பேசி வீட்டிலிருந்து கொண்டு செல்லும் உணவை உண்டு இரவுப் பொழுதை நீர்க்கரை ஓரங்களில் மகிழ்ச்சியாக கழிப்பது பழங்காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம்.

சித்திரை பௌர்ணமி தினத்தன்று அம்மன் கோயில்களில் பால் குடம் எடுப்பது  விளக்கு பூஜை விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.  மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்   ஆலயத்தில் இது பத்து நாள் விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தாயாரை இழந்தவர்கள் சித்திரை பௌர்ணமியன்று விரதமிருந்து தர்ப்பணம் செய்வதால் வாழ்வில் அனைத்து நலமும் கைகூடப் பெறலாம்.

எமதர்மன் சபையில் அனைவரது பாவ புண்ணிய கணக்குகளை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்ரகுப்தன் இப்பதவியைப் பெற்றதற்கு புராணத்தில் சொல்லப்படும் கதைகளில் ஒன்றைக் காண்போம்.  திருக்கயிலையில் ஒரு முறை பார்வதி தேவி ஓவியம் ஒன்றை வரைந்தார். அந்த ஓவியம் மிக அழகாக இருக்கவே பரமனிடம் அதைக் காண்பித்து இந்த ஓவியத்து உயிர் கொடுங்கள் என வேண்டினார்.  பரமனும் ஓவியத்துக்கு உயிரூட்ட அது ஓர் அழகிய ஆண் மகனாக உருவெடுத்தது.  அவருக்கு சித்திர குப்தன் எனப் பெயர் சூட்டினர். அம்மையப்பன் குப்தம் என்பதற்கு ரகசியம் எனவும் பொருள் உண்டு .  உலக உயிர்களின் பாவ புண்ணியம் கணக்குகளை ரகசியமாக சரிபார்ப்பதால் சித்ரகுப்தன் என பெயர் ஏற்பட்டது.

பரமனின் அருள்பெற்ற சித்ரகுப்தனுக்கு தனிக்கோயில் ஒன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோயிலில் சித்ரகுப்தன் தனிச் சன்னதியில் இடது காலை மடித்தும் வலது காலை தாமரை மலரில் பதித்தும் வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் ஓலைச்சுவடியும் கொண்டு தரிசனம் தருகிறார்.

நவக்கிரகங்களில் நிழல் கிரகமான கேதுவை மோட்சகாரகன் என்று அழைப்பர். கேதுவின் அதிதேவதை சித்ரகுப்தன்.  கேது பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.  கேது பகவானுக்குரிய தானியமான கொள்ளு மற்றும் ராகு பகவானுக்குரிய உளுந்தை சித்ரகுப்தருக்குப் படைத்து பிறகு அவற்றை பசுவுக்கு உண்ணக் கொடுப்பதால் கேது தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறலாம்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பௌர்ணமியன்று சித்ரகுப்தரின் ஜயந்தி விழா இக்கோயிலில் மிகச் சிறப்பாக  நடைபெறுகிறது.  உயர் பதவி வேண்டுவோர் அன்று அவரை வழிபட விரைவில் பதவி உயர்வு பெற்று மேன்மையுறலாம்.  மேலும் வளமான வாழ்வு மேன்மை பொருந்திய ஞானம் கிட்டும்.

சித்ர குப்தம் மாப் ராக்ஞம்

லேகனீபுத்ர தாரிணம்

சித்ரா ரதனாம்பரதாரம்

மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

எனும் ஸ்லோகத்தைச் சொல்லி தாம் செய்த தவறுகளைப் பொறுத்தருளும்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்.  அன்று உப்பு பசும்பால் தயிர் போன்றவற்றை நீக்கி விரதம் இருப்பதுடன் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s