தர்ப்பைப் புல்

தர்ப்பை புல் என்றவுடனே ஏதோ சாங்கித்திற்கான புல் என்று எண்ண வேண்டாம். ஏனென்றால் இதுவரை நாம் அப்படித்தான் அதை பார்த்துள்ளோம்.  அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு  பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம்.

தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும் கிரஹணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது.  தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர எங்கும் முளைக்காது.  தர்ப்பை புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீர் இல்லாமலும் வளரும்.  பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரஹணத்தின் போது இதற்கு வலிமை அதிகம்  இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்று நோய்கள் அண்டாது.  அதனால்தான் கிரஹண காலத்தில் இந்த புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மளிகைப் பொருட்கள் குடி நீர்களில் போட்டு வைக்கிறோம்.

இந்த புல்லில் காரமும் புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். இதில் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையது . குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க கூடியது.  மூவகை தோஷங்களாக்ய வாத பித்த கபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சம நிலை படுத்துவதால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறு நீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.  மேலும் சிலருக்கு துர் நாற்றமுள்ளதாகவும் மஞ்சிட்டை கலக்கிய நீர் போன்றதுமாக சிறு நீர் வெளியேறும். நிலையில் அதற்கு மாஞ்சிஷ்ட மேஹம் என்றும் துர் நாற்றம் சூடு இரத்தம் போன்றும் சிறு நீர் வெளியேறுவதும் இரத்தமேஹமென்றும் கூறப்படுகிறது.

இந்த மூன்று வகையான சிறு நீர் உபாதைகள் அனைத்தும் பித்த தோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அது போன்ற நிலைகளில் தர்ப்பை குடி நீர் அருந்துவது பித்த்த்தினால் ஏற்படக்கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறு நீரகம் மற்றும் சிறு நீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு குடி நீர் ஆகும்.

சுமார் 15 கிராம் புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் ஆகும்வரை காய்ச்சி குளிர்ந்த பிறகு வடிகட்டி  அந்த நீரை ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக பருகி வர மேற்குறிப்பிட்ட  உபாதைகள் நீங்கி விடும்.   இதைக் காய்ச்ச முடியவில்லையானால் இந்த புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத்தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகலாம்.  இதற்கு ஹிமகஷாயம் என ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.

சர்க்கரை உபாதை தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதால் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானம்.

இது தாய்ப்பாலையும்  சிறு நீரையும் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. சிறு நீரகத்தின் இரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன் இரத்தத்தில் தேங்கும் யூரியா கிரியாட்டினின் கழிவுப் பொருட்களையும் அகற்றுகிறது.  சிறு நீரகக் கற்களை உடைத்து வெளியேற்றுகிறது. சிறு நீரகப்பையில் ஏற்படும் வலி  மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குகளை கட்டுப்படுத்தும். மஞ்சள் காமாலையில் கல்லீரலில் ஏற்படும் கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்த ஊறல் ஆகியவற்றை குறைக்கிறது.  இரத்தக் காந்தல்  இரத்தமூலம்  இரத்தக்கசிவு வாய்ப்புண் சிறு நீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை அருந்தி நமது ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வோம்.

 

.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s