நியூ[ஸ்]மார்ட்

பூமி வெப்பமடைவதால் ஒவ்வொரு ஆண்டும் துருவப்பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி உடைந்து இடம்பெயர்ந்து வருகின்றன. இயற்கை மனித குலத்துக்கு விடும் எச்சரிக்கையாக கனடாவின் கடற்கரை நகரமான பெர்ரிலாண்ட் பகுதிக்கு 150 அடி உயரமுள்ள மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று மிதந்து வந்திருக்கிறது. இதில் 90 சதவீதம் தண்ணீருக்கு கீழே தான் இருக்கிறது.  1912 ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறையை விட இது 50 அடி உயரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ம் ஆண்டில் தன் 22 வயதில் மிக்சிகனில் வசித்த மாணவியான கெவின் மோர்டன் என்பவர் ஒரு வெறியனால் சுடப்பட்டார். தானே மருத்துவமனைக்கு காரை ஓட்டிப்போனாலும் பாதியில் நினைவிழந்ததால் வேறு சிலரால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பத்து சதவீத வாய்ப்பில் உயிர் பிழைத்தார்.  ஆனாலும் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னும் பல மாதங்கள் கோமா நிலைக்குச் சென்றார். ஷேத் என்ற பெண் மருத்துவரின் இடைவிடாத முயற்சியால் அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு உடல் தேறினார். முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் மருத்துவமனையில் போராடியவர் குணமானதும் மருத்துவப்படிப்பில் சேர்ந்தார். படித்து முடித்து இன்று அதே மருத்துவமனையில் டாக்டராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

விவசாயத்துக்கும் நிலத்தடி நீர்மட்டத்துக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்திரவிட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிதிப் பற்றாக்குறையால் பல்வேறு மாவட்டங்களில் இப்பணி  நின்றுவிடக்கூடாது என்பதற்காக நிதி திரட்ட நீதிபதி திரு ஏ செல்வம் தீர்மானித்தார். உயர் நீதிமன்றக் கிளையில் பதிவாளர் பெயரில் தனி வங்கிக் கணக்கு தொடங்கி அதில் அவர் முதலில் ரூபாய் பத்து ஆயிரம் டெபாசிட் செய்து நிதி சேகரிப்பை ஆரம்பித்தார்.  தொடர்ந்து நீதிபதிகள்  வழக்கறிஞர்கள் என பலர் இந்த கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர். தற்போது மற்ற மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்களிடம் அன்பளிப்பாகப் பெறப்பட்ட தொகையை சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக இந்த வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றனர்.  இதுவரை 14 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ள பணத்தில் இருந்து மதுரை மாவட்டத்துக்கு  ரூபாய் மூன்ரு லட்சமும்  திண்டுக்கல்  ராம நாதபுரம் சிவகங்கை மாவட்டங்களுக்கு தலா இரண்டு லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 120 நாடுகளிலிருந்து பெண்கள் பங்கு பெற்ற கார்டியர் விமன்ஸ் இனிஷியேட்டிவ் விருதை 46 வயதான த்ருப்தி ஜெயின் என்னும் [ இந்திய சுற்றுச்சூழல் ] பெண் பொறியாளர் வென்றுள்ளார்.  பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 2006 ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.  விருதுடன் 60 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இவர் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர்.

1948 ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் மதிப்பிலான மஹாத்மா காந்தி படம் பொறிக்கப்பட்ட சர்வீஸ் தபால் தலை அண்மையில் லண்டனில் ஏலம் விடப்பட்டது  விற்பனைத் தொகை எவ்வளவு தெரிய்மா?  ஐந்து லட்சம் பவுண்டு  [ ஒரு பவுண்டு சுமார் 83 ரூபாய் ]  இந்திய தபால் தலைகளில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது இதுதான் என்கிறார்கள்..  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் இதை வாங்கியிருக்கிறார்  மஹாத்மா என்றால் அந்த மதிப்பே தனிதான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s