கொல்லிமலை

கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்று  கிரிஸ்டல் கிளியரான தண்ணீர் கண்கொள்ளாப் பசுமை மூலிகை வாசம் என அனைத்தையும் தன்னகத்தே கொண்ட மலைதான் கொல்லிமலை.

தமிழத்தில் மலைவாசஸ்தலங்கள் என்றதுமே ஊட்டி கொடைக்கானல்  ஏற்காடு போன்ற இடங்கள் தான் அனைவருக்கும் நினைவு வரும். ஆனால் அனைத்து அழகையும் அள்ளி வைத்திருக்கும் கொல்லிமலை பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. முன்பொரு காலத்தில் தவம் செய்ய அமைதியான இடத்தை தேடி அலைந்த முனிவர்கள் கொல்லிமலையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முனிவர்கள் தவம் செய்யும் போது அரக்கர்கள் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்த அரக்கர்களின் அட்டூழியத்தைத் தடுத்த நிறுத்த முனிவர்கள் கொல்லிப் பாவையிடம் முறையிட கொல்லிப்பாவை தோன்றி அரக்கர்களை வதைத்ததாகவும் பின் முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று இம்மலையிலேயே கொல்லிப்பாவை அம்மன் காவல் தெய்வமாய் நிரந்தரமாக தங்கிவிட்டதாகவும்  இப்படி கொல்லிப்பாவை அம்மன் வசிக்கும் இடமே கொல்லிமலை என்றாகிவிட்டதாகவும்  கூறுகிறார்கள்.  கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி  சிற்றருவி  மாசிலா அருவி  தாவரவியல் பூங்கா  படகு இல்லம் அறப்பளீஸ்வர்ர் கோயில் வியூ பாய்ண்ட் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் அற்புத பகுதிகள்.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏறத்தாழ முன்னூறு அடி உயரத்திலிருந்து வெள்ளியை உருக்கிக் கொட்டியதைப் போல தண்ணீர் கொட்டுகிறது.  ஆண்டு முழுவதும் அருவி ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கும். இந்த அருவிக்குச் செல்ல மேலிருந்து செங்குத்தாக ஆயிரம் படிகள் இறங்கிச் செல்லவேண்டும்.  அறப்பளீஸ்வர்ர் கோவிலை ஒட்டியே அமைந்திருக்கிறது. இந்த ஆகாய கங்கை அருவி.  கீழிருந்து பார்க்கையில் ஏதோ ஆகாயத்திலிருந்து அருவி ஊற்றெடுப்பதுபோல தோன்றுவதாலேயே ஆகாய கங்கை என இதற்குப் பெயர் வந்துள்ளது.  ஆகாய கங்கை அருவிக்குச் செல்லும் வழியில் கோரக் சித்தர் உள்ளிட்ட சில சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. பல அரிய மூலிகைகள் கொண்ட கொல்லிமலையிலிருந்து வரும் அருவியில் குளித்தால் நோய்கள் நீங்கி மனதும் உடலும் புத்துணர்ச்சி பெறும் என்பது நம்பிக்கை.

இயற்கை அன்னையின் அழகை ஒட்டுமொத்தக் குத்தகைக்கௌ எடுத்துக்கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்புப் பெற்றது. இம்மலையைப் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை புற நானூறு ஐங்குறு நூரு போன்ற பழந்தமிழ் நூல்களில் வரலாற்றுக் குறிப்புக்களாக உள்ளன.

நாமக்கல்லிருந்து 55 கிமீ தூரத்தில் உள்ள கொல்லிமலைக்கு செல்ல அரசு பேருந்துகல் இயக்கப்படுகின்றன. 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் வளைந்து நெளிந்து மேகம் வந்து மலைமுகடுகளைத் தொட்டு தொட்டுச் செல்லும் இயற்கைகாட்சிகளை ரசித்தபடி சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் கொல்லிமலையை அடையலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s