நர்மதா பரிக்கிரமா

கிரிவலம் வருவது என்பது தொன்றுதொட்டு உள்ளதுதான். ஆனால் நதிவலம் வருவது என்பது வழக்கத்தில் பெரிதாக இல்லை. அது மிகவும் கடினமான ஒன்று.  ஆனால் ஒரே ஒரு நதியை மட்டும் மக்கள் மிகுந்த பக்தியோடு தொன்றுதொட்டு வலம் வருகிறார்கள்.  அத்தகைய சிறப்பு பெற்ற புனித நதி நர்மதை.  விடமுண்ட சிவபெருமானுக்கு அதன் உஷ்ணம் தாளாமல் நெற்றியில் வியர்க்க அந்த வியர்வை துளிகளில் தோன்றியவளே நர்மதை. இதனால் அவள் சிவபுத்ரியாவாள்.  ஜடாபுத்ரி என்றும் அழைக்கப்படுகிறாள்.  தன் தந்தையாகிய ஈசனை எப்போதும் தன்னருகில் இருக்குமாரு கேட்டுக்கொள்ள அவரும் அதற்கு சம்மதிக்கிறார். கோடிக்கணக்கான பக்தர்களின் பாவங்களை நீக்கிய கங்கை தன்னிடம் சேர்ந்துள்ள பாவங்களை எங்கே போய் நீக்கிக்கொள்வது என்று சிவபெருமானிடம் கேட்டபோது அவர் நர்மதையில் நீராடுமாறு அவளிடம் கூறுகிறார். அதன்படி நர்மதையில் நீராடி கங்கை தன் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள்.

சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது ஏற்பட்ட சாம்பலின் ஒரு பகுதி கயிலை மலையில் விழுந்தது.  மற்றொரு பகுதியை சிவன் தன் மேனியில் ஏற்கிறார். மூன்றாவது பகுதி சாம்பல் முழுவதும் நர்மதை நதியில் விழ அதன் துகள் ஒவ்வொன்றும் பாண லிங்கங்களாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது.  விந்திய சாத்புரா மலைதொடருக்கு நடுவே மூவாயிரம் அடி உயரத்தில் அமர்கண்டக் என்னுமிடத்தில்தான்  நர்மதை நதி உற்பத்தியாகிறாள்.

மிகமிகப் புனிதமானவளாகக் கருதப்படும்  நர்மதை நதியை முதன் முதலில் வலம் வந்து நர்மதா பரிக்கிரமாவை ஆரம்பித்தவர் மார்க்கண்டேய மகரிஷியாவார்.  நர்மதை நதி மத்திய பிரதேச மானிலத்தின் அமர்கண்டக் என்ற இடத்தில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து சட்டீஸ்கர் மஹாராஷ்டிரம் குஜராத்தி மானிலங்களினூடே பயணித்து குராத்தில் பரூச் என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது.

காளிதாசன் தனது புத்தகத்தில் இதை அமர்கூட் என்று குறிப்பிட்டுள்ளார்.  தீர்த்தாடனங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அளவுக்கு அமர்கண்ட் சிறப்புப் பெற்றது  நர்மதை மட்டுமல்ல  சோன் நதி ஜோஹிலா போன்றவையும் அமர்கண்டக்கில்தான் உற்பத்தியாகின்றன.

இத்தகைய சிறப்புப் பெற்ற நர்மதை நதியை மரபுப்படி வலம் வரவேண்டுமென்றால் மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்கள் பதிமூன்று நாட்களாகும்.இப்போதும் கூட பல பக்தர்கள் மூன்றாண்டு மூன்று மாதம் பதிமூன்று நாட்களில் பாத யாத்திரையாக இதைப் பரிக்கிரமா செய்வ்துண்டு.  ஆண்டுக்கணக்கில் செய்ய இயலாதவர்கல் நான்கு முதல் ஆறு மாதங்களில் பாத யாத்திரையக இதை வலம் வருகிறார்கள். இதுவும் முடியாதவர்கள் 15 நாட்களில் பேருந்து மூலம் நதியை வலம் வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s