அன்று ஆடியவை

பல்லாங்குழி

இருக்கும் இடத்தில் எடுத்து  இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வரை……….

பரமபதம்

ஏற்றம் இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த……………

கில்லி

கூட்டல் பெருக்கல் கணக்கை களிப்புடன் மகிழ்ந்து கற்க……..

தாயம்

வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற…….

சதுரங்கம்

இதர வழி இல்லாதபோதும் இறுதிவரை போராடும் மனம் உறுதி பெற……

நொண்டி

சமமாக இல்லாதபோதும் சாதிக்கத்தூண்டும் சக்தியை பெற………..

கண்ணாமூச்சி

ஒளிந்து இருப்பவர்களை கண்டு பிடிப்பதற்கான பொறுமையையும்  தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையையும் பெற…………………….

இன்று இந்த ஆட்டங்களெல்லாம மறந்தே விட்டது  மறைந்தும் விட்டது என்றே சொல்லலாம். சுமார் 2005 வரை இந்த ஆட்டங்களில் பலவற்றை நாங்கள் எங்கள் வீட்டில் ஆடிவந்தோம் கடும் வெய்யிலில் என் பெண்களை வெளியே விளையாட அனுமதிக்க முடியாதபோது இவைகளை வாங்கி வந்து ஆடக்கற்றுக்கொடுத்தேன்.  மிக விரைவாக கற்றுக்கொண்டு ஆடப்பழகினார்கள்.

இப்போதும் கணினியில் பல விதமான விளையாட்டுக்களை ஆடிவருகிறோம்.  ஆனால் அவை நேரத்தை கடத்த உதவுகிறதே தவிர  மன மகிழ்ச்சியையோ உடற்பயிற்சியையோ தருகிறதா என்றால் இல்லை என்பது தான் என் பதில்

Advertisements

2 thoughts on “அன்று ஆடியவை

  1. We were very fortunate to have played these games really & not virtually as today’s Genere kids:( No technology can give the happiness that is derived from playing these real games with friends:))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s