துருக்கி நாட்டு கதை

துருக்கியின் அரசன் ஒரு நாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.  யாரோ ஒரு வேட்டைக்காரன் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்த போது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.  அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்த்து. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து இது என்ன உனது இடது கையில் கயிறு என்று கேட்டார். தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்  என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது  இந்த குச்சி எதற்கு என கேட்டான் அரசன்.  வெளியே என் மனைவி தானியங்கலை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.  இந்தக் குச்சியின் மறு முனையில் கறுப்புக் கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது என்றான்.  அந்த நெசவாளி இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். இந்த மணியை எதுக்கு கட்டியிருக்கிறாய் எனக் கேட்டான் அரசன்.

வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால் போதும் ஓடிவிடும் என்று பதில் சொன்னான்,  அவனது வீட்டு ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறுவர்கள் முகம் தெரிந்த்து.  நெசவாளியைப் பார்த்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அரசன் கேட்டான்.

நூற்பு வேலை செய்து கொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது  அதனால் அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன்.அவர்கள் வெளியே இருந்து கேட்டுக்கொள்வார்கள் என்றான்.  அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?  உள்ளே வரலாம் தானே என அரசன் கேட்டான்.  அதற்கு  நெசவாளி சொன்னான். அவர்கள் காதுதான் நான் நட்த்தும் பாடங்களை கேட்கிறது. ஆகவே அவர்கள் என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்  என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றைக் குழைத்துக் கொண்டிருப்பார்கள் என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்கலை ஒருவன் செய்ய முடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.  நெசவாளி சொன்னான்.  இது மட்டுமல்ல என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துவிட்டு போவாள்  வேலை செய்து கொண்டே அதையும் கற்று வருகிறேன். ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும் கற்றுத் தரவும் முடியும்.  வேலை செய்யவும் வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

ஒரு தேசத்தை நிர்வாகம் செய்வதற்கு இப்படியானவர்களே தேவை என்று முடிவு செய்தான் அரசன். அந்த நெசவாளியை தனது நாட்டின் மந்திரியாக நியமித்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s