நியூ[ஸ்]மார்ட்

துபாயில் நடைபெற்ற சர்வதேச பாரா தடகளப் போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 13 பதக்கங்களை வென்றிருக்கிறது.  குண்டு ஈட்டி வட்டு எறியும் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை  சுந்தர் சிங் குர்ஜார் வென்றார். மகளிருக்கான சக்கர நாற்காலி குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கரம்ஜோதி தங்கப்பதக்கமும் அஸ்வதி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். உயரம் தாண்டுதலில் சரத்குமார் வெள்ளிப் பதக்கமும் நாகராஜ் கவுடா வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

பிம்லா தேமி பூனம் இருவரும் தில்லி அருகேயுள்ள குருகிராம் நகரில் வங்கி ஒன்றில் பணியாற்றுபவர்கள் அங்கே நடக்க் இருந்த கொள்ளைச் சம்பவத்தை இருவரும் தைரியமாகத் தடுத்து நிறுத்தி உள்ளனர். வங்கியில் நுழைந்த இரு கொள்ளைச் சம்பவத்தை இருவரும் தைரியமாகத் தடுத்தி நிறுத்தி உள்ளனர். வங்கியில் நுழைந்த இரு கொள்ளையர்கள் அங்குள்ள பணியாளர்களைத் தாக்கும்போது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை பிம்லா தேவியும் பூனமும் லாகவமாகப் பிடுங்கி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு கூக்குரல் இட்டனர். பின்னர் அவர்களது சத்தத்தைக் கேட்டு வந்த பக்கத்துக் கடைக்கார்கள் உதவியுடன் கொள்ளையர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களின் தைரியத்தி அனைவரும் பாராட்டினர்  பூனம் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேற்குவங்க மானிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரா பானர்ஜி  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ் கே கவுல் சுப்ரீம் கோர்ட் உச்ச நீதி மன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ரதை அடுத்து இந்தப் பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நட்த்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான் பிபிசி தமிழோசையின் மின் சிற்றலை ஒலிபரப்பு ஏப்ரல் மாதம் 30ம் தேதியோடு நிறுத்தப்பட்டுள்ளது. 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை 76 ஆண்டுகளாக தமிழ் ஒலிப்பரப்பை நடத்தி வந்தது  சிற்றலை என்ற தொழில் நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள் தொலைக்காட்சி இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே இதன் காரணம் சங்கர் என்கிற சங்கரமூர்த்தி தலைமையில் ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்னாட்ஷா போன்றோரின் நாடக மொழிப்பெயர்ப்புக்கள் மற்றும் பிற சஞ்சிகை வடிவ நிகழ்ச்சிகளைச் சிறப்பாக வழங்கி வந்தது. பிபிசி தமிழோசை 1990களின் பிற்பகுதியில் முழுமையான செய்தி மற்றும் நடப்பு விஷயங்களுக்கான ஒலிபரப்பாக மாறியது. பிபிசி தமிழின் சிற்றலை ஒலிபரப்புக்கள் நிறுத்தப்பட்டாலும் அதன் இணையதள சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

 

Advertisements

One thought on “ நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s