தொலைந்து போன என் அக்ரஹாரம்

காவி கோடிட்டு கட்டங்கள் போட்ட அத்திண்ணையில் தான் எங்கல் வேதங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்.

அங்கொரு ஓரத்தில் முன் தினம் கிடைத்த நெல்மணிகள் எம் குலப்பெண்களால் கையுரலில் அரைப்பட்டுக்கொண்டிருக்கும்

எல்லா காலங்களிலும் இருள் நீக்கும் தீபமேற்ற தலைவாசலிருபுறமும் மாடப்பகுதிகளிருக்கும்.

கொல்லையில் குலை தள்ளும் வாழையும் நெல்லியும் கொய்யா மரத்துடன் மாமரங்களும் மகுடமாய் துளசி பீடத்தையும் எல்லோரஹத்திலும் காணலாம்.

பிரம்ம முகூர்த்ததில் வீதியில் நடை பயில்வோர் விடுபட்ட சுப்ரபாதத்தை இன்னொரு வீதியில் தொடராக கேட்கலாம்.

பசுஞ்சாணம் தெளித்து பச்சரிசி மாக்கோலமிட அத்தனை ஜீவன்களும் அதையுண்டு பசி தீர்க்கும்.

ஔபாஷனத்தால் எல்லோர் வீட்டு கூறைகளும் மேகக்கூட்டத்தால் சூழ்ந்ததைப் போல் காட்சியளிக்கும்.

புளியம் முத்துக்களும் சதுரங்க தாயங்களும் எங்கள் சிறுவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும்

தயிர் மத்தின் சத்தங்களால் தாழியில் நவ நீதமது புது பிறபெடுத்து கொண்டிருக்கும்.

நாளொரு தினமாய் நாயன்மாரும்  ஆழ்வாரும் வீதியில் உலா வந்து செல்வர்.

பதினென் பருவாள் பாவாடை சட்டையில் பவனி வர எம் குலமகன்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பாள்.

எங்களால் உருவான அக்ரஹாரங்கள் யாராலோ அழிகின்றன.

வேதங்களை விற்க விதேசம் பறந்தனர் சிலர்  அசௌகர்யங்கள் பல கூறி அடுக்கு மாடி குடிபுகுந்தனர் சிலர்.

பால்ய பருவ நிகழ்ச்சிகளை மறக்க இயலாமல் பல முறை அந்த அக்ரஹாரத்தை கடக்கும் போதெல்லாம் அனல் பெருமூச்சொன்று எனை அறைந்து செல்கிறது.

எல்லோரும் ஆடி பாடி மகிழ்ந்த எங்கள் திருக்கோயில் ஒரு வேளை சேவைக்காக  ஒளிக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது.

எப்போதாவது நடக்கும் எண்ணெய் காப்பிற்காகவும் நிவேதனப் பிரசாதத்திற்காகவும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்னமும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

 

 

Advertisements

3 thoughts on “தொலைந்து போன என் அக்ரஹாரம்

  1. மிகவும் நன்றி தனபாலன் உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s