தயக்கத்தை தவிர்ப்போம்

 

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை. வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை.  நீல் ஆம்ஸ்ட்ராங்  இவர்தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்.

ஆனால் முதல் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?  பல பேருக்கு இது தெரியாது.  அவர் எட்வின் சி அல்ட்ரின்.  இவர் தான் நிலவுக்கு சென்ன அப்பலோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.  ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப்படையில் பணி புரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் இவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.  நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவர் கோ பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பலோ விண்கலம் நிலவை அடைந்த்தும் நாஸாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது ஆனால் ஆல்ட்ரினுக்கோ சின்ன தயக்கம்.  இடது காலை வைப்பதா  வலது காலை வைப்பதா? என்றல்ல?    நிலவில்  முதன்முதலில் கால் எடுத்து வைக்கிறோம்   புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம் கால் வைக்கும்  இடம் எப்படி இருக்குமோ தெரியாது  புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்  எரி மணலாக் இருந்து காலை சுட்டுவிட்டால்  தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை  சில நொடிகள் தான் தாமதித்திருப்பார்.  அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது.  கோ பைலட் நெக்ஸ்ட்

நீல் ஆம்ஸ்ட்ராங்க்  கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.  உலக வரலாறு ஆனார்………………..

உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது.   திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்டிரினை யாருக்கும் தெரியவில்லை.  முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும். என்பது மட்டுமல்ல.  தயக்கம் பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் நாம் இந்த சம்பவத்தை  நினைவில் வைத்துக்கொள்வோம்  ஒரு நிமிட தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளை தடுத்துவிடுகிறது.   நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம் பயம் கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

தவறுகளை தட்டிக்கேட்க தயக்கம்  அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம். ஏன் சிலருக்கு இந்த்த் தகவலை நண்பர்களுக்குப் பகிரக் கூட தயக்கம்.  சரியானதை செய்ய தயங்கினால் தவறானதைத்தான் செய்துகொண்டிருப்போம்.

எனவே நல்ல விஷயங்களில் தயக்கத்தை தவிர்ப்போம்  தலை நிமிர்ந்து நிற்போம்.

Advertisements

One thought on “தயக்கத்தை தவிர்ப்போம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s