ராணி தோபியும் ராமர் கோயிலும்

பினாங்கிலுள்ள [ மலேசியா ] ஸ்ரீராமர் கோயில் மிகப்பழமையான புராதனமான கோயிலாகும்.  1872 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே கட்டப்பட்டது.  1802 ஆம் வருடம் ராணி தோபி என்ற சலவைத் தொழிலாளர் இனத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு இந்த கோயில் உள்ள இடம் சுற்றுப்புற நிலங்கள் ஆகியவற்றை ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஐலன்ட்டைச் சேர்ந்த கவர்னர் ஸர் ஜார்ஜ் லீத் வழங்கினார். என்று வரலாறு கூறுகிறது.

சமூக நலனில் ஈடுபாடு உடையவர் ராணி தோபி  தமது பெயரில் மெமோரியல் ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி சலவைத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வீடுகளையும் பல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தார். கோயில் கருவறையில் முதலில் மரத்தினால் இருந்த ஸ்ரீராமர் சில அகற்றப்பட்டு இப்போது கல் சிலையாக உள்ளது.  1967 ஆம் ஆண்டு இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் இக்கோயில் கொண்டுவரப்பட்டது.

கோயிலுக்குள் ஸ்ரீராமர் சீதா பிராட்டியார் லக்ஷ்மணன் அனுமார் வினாயகர் நவக்கிரங்கள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் சிலைகள் உள்ளன.  ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி பூஜைகள்  நடத்தப்படுகின்றன  கோயிலுக்கு பின்புறம் ஆறு ஒன்று ஓடுகிறது. 

ஸ்ரீராம நவமி  அனுமன் ஜெயந்தி ஆகிய பண்டிகைகள் மிகப்பெரிய அளவில் சிறப்பாக்க் கொண்டாடப்படுகின்றன.  ஆடி அமாவாசை தர்ப்பணத்தை இந்த நதியில் பக்தர்கல் இன்றும் செய்து வருகிறார்கள்.  ஸ்ரீ ரங்கத்திலிருந்து குருக்கள் வந்து இங்கு தங்கியிருந்து பூஜைகள் செய்கிறார். இங்கிருக்கும் ஆஞ்சனேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கருதப்படுகிறார்.  பினாங்கிலுள்ள இந்த ஒரே ஒரு ராமர் கோயில் பிரசித்தமானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s