நியூ[ஸ்]மார்ட்

 

அமெரிக்க நாட்டின் ஹெல்த் கேர் ஏஜென்ஸி என்னும் சுகாதார காப்பீட்டு ஆணையத்தின் தலைவராக இந்தியப் பெண் சீமா வர்மா பொறுப்பெற்றுள்ளார். அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது இந்தியர் இவர். இத்துறையில் இவர் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். குறிப்பாக அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆளுனராக இருந்த இண்டியானா மாகாணத்தில் சுகாதாரச் சீர்திருத்த நடவடிக்கையில் சீமா முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்க அரசுக்குச் சொந்தமான சென்டர்ஸ் பார் மெடிகேர் அண்ட் மெடிகெய்டு சர்வீசஸ் 13 கோடி அமெரிக்கர்களின் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களை நிர்வகித்து வருகிறது. ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த அமைப்பின் தலைவராக இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சீமா வர்மாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனில் ஒரு வைரச் சுரங்கத்தில் வேலை செய்யும் இமானுவேல் மோமோ என்ற பாதிரியார் சில நாட்களுக்கு முன்னர் மிகப்பெரிய வைரத்தைக் கண்டுபிடித்தார். அது 706 கேரட் உடையது என தெரிய வந்தது.  பின்னர் இதை அரசிடம் ஒப்படைத்துவிட்டார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான சௌம்யா சுவாமி நாதன். ஐக்கிய நாடுகள் சபை அமைக்கும் சர்வதேச மருந்து எதிர்ப்பு சக்தியைக் கொண்ட நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ நா வின் பொதுச் செயலர் அண்டோனியோ குட்டரேஸ் இந்த உயர் அமைப்பிற்கு அவரை நியமித்துள்ளார். 57 வயதான சௌம்யா சுவாமி நாதன்  தற்போது மத்திய உடல் நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திலுள்ள உடல் நல் ஆய்வுத்துறையின் செயலராகவும் பதவி வகிக்கிறார். இவர் காச நோய் பற்றிய ஆராய்ச்சிகளில் புகழ் பெற்றவர். 1992 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பணி புரியத் துவங்கிய சௌம்யா சுமார் 23 ஆண்டுகள் உடல் நலம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

சமீக சேவைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த 25 ஆசிய பெண்களுக்கு தலைசிறந்த மகளிர் விருது சிங்கப்பூரில் வழங்கப்பட்டது. இதில் 11 பேர் இந்தியப் பெண்கள்.  சிங்கப்பூர் நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் வர்த்தக மேம்பாடு ஆராய்ச்சிக்குழும்ம் இணைந்து இந்த விருதினை வழங்கினர்.  இந்திய ராணுவத்தில் சிறந்த பணியாற்றிய வந்தனா ஷர்மா  மும்பையில் 2007 ல் ஆசியாவின் முதல் மகளிர் டாக்ஸி சேவையைத் தொடங்கி பெண்களுக்கான இருசக்கர வாகனப் பயிற்சிப் பள்ளியையும் வெற்றிகரமாகவும் நடத்தி வரும் ரேவதி சித்தார்த்த ராய் குழந்தைகளுக்கு விமான தொழில் நுட்பத்தைக் கற்றுத்தரும்  சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீமதி கேசன் உட்பட 11 இந்திய பெண்கள் இந்த விருது பெற்றிருக்கிறார்கள்.

இயற்கையில் தான் எத்தனை அதிசயமான உயிரினங்கள் வாழ்கின்றன.  இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை ஃப்ளொரசன்ட் பச்சைத் தவளை அர்ஜென்டினாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் அந்த்த் தவளையின் வண்ணம் பச்சை மஞ்சள் மற்றும் சிவப்பாக இருக்கும். ஆனால் இரவு நேரங்களில் அதன் கண்களும் உடலில் உள்ள புள்ளிகளும் அடர் நீலத்திலும் மற்ற பகுதிகள் புளோசன்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன. ஏற்கெனவே சிலவகை பவளப்பாறைகள் மீன்கள் சுறாக்கள் கடல் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரின்ங்களிட்த்திலும் நிலத்தில் வாழும் சிலவகை கிளிகள் மற்றும் தேள்களிடமும் இத்தகைய புளோரசன்ட் தன்மை காணப்பட்டிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s