திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்

 

தெய்வ சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்  எங்காவது ஓரிடத்திலாவது சிற்பியின் உளிபட்ட இடம் தெரியும். ஆனால் இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜலபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல சிலையில் வடிக்கப்பட்டுள்ள நெற்றிச்சுட்டி காதணிகள் பருவங்கள் நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்ப்பிரதேசம் இருந்தாலும் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும்போதும் பெருமாளுக்கு வியர்த்துவிடும்.  பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில் ஏழுமலையான் சிலை எப்போது 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே?  ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் நகைகள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு பொங்கல்  தயிர்சாதம் புளிசாதம் வடை முருக்கு ஜிலேபி அப்பம் போளி அதிரசம் பாயசம் தோசை ரவாகேசரி பாதாம் கேசரி  முந்திரிபருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன.இதில் லட்டு முதலிடம்பெற்று விளங்குகிறது.  ஏழுமலையானுக்கு ஒரு புதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும் தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதிய வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள்  கருதுகின்றனர்.

பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும் ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதைப் பெருமாளுக்கு சாத்த அலுவலத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும் பணம் செலுத்துவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.  உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20000 ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.  பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

பெருமாளின் அபிஷேகத்திற்கு ஸ்பெயினிலிருந்து குங்குமப்பூ நேபாளத்திலிருந்து கஸ்தூரி சீனாவிலிருந்து புனுகு  பாரீஸிலிருந்து வாசனை திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின் கஸ்தூரியும் புனுகும் சாத்துவர். தினமும் காலை 4.30—5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம் பணம் செலுத்தியவர்கல் 3 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும்.

பெருமாளுக்குரிய ரோஜா பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ 80 பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.  சீனாவிலிருந்து கற்பூரம் அகில் சந்தனம் அம்பர் தக்கோலம் லவங்கம் குங்குமம்  தமாலம் நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கல் கொண்டு வரப்படுகின்றன.  ஏழுமலையானின் நகைகள் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை சாத்துவதற்கு  நேரமும் இல்லை.

ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது  இதை மூன்று அர்ச்சகர்கள் சேர்ந்துதான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ  ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் எங்கும் கிடையாது.

பல்லவர்கள் சோழர்கள் பாண்டியர்கள் விஜய நகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளை செலுத்தியுள்ளனர். ராஜேந்திர சோழன் கிருஷ்ண தேவராயர் அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.  மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கினார்.   இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பல திருப்பணிகள் செய்து கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோவிலில் உள்ளது. கோவிலுக்கு வரிசையில் செல்லும்போது காணலாம்.

அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாசலபதி விக்ரகம் 966ல் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெரும்தேவி இந்த விக்ரத்திற்குரிய நகைகள் தந்துள்ளார். வெள்ளிக்கிழமைகளிலும் மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வாச்சர்னை செய்யப்படுகிறது.  மகர சிவராத்திரியில் க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதுயுலா எழுந்தருளுவார். தாளப்பாக்கம்  அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும் சிவாம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத்திறக்கிறார் என்பது ஐதீகம்.

திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம். சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம்பெற்றிருக்கும். ஆனால் திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணீயாகவே சேவை சாதிக்கிறார்.

ஆங்கிலேயர்களினல் சர்தாமஸ் மன்றோ  கர்னல் ஜியொஸ்டிராட்டன்   லெவெல்லியன் என்ற வீர்ர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்த்தோடு பல நேர்த்திக்கடன்களை செலுத்தியுள்ளனர். இதில் இன்றுவரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிட்த்தக்கது.

திருப்பதி அலமேல் மங்கைக்குரிய ஆடை கத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில்படும் இந்த ஆடையை நெய்யும்போது மூன்று வளை குளிப்பதும் மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே கோய்லை ஒட்டிய தெப்பக்குளம் மீண்டு கலக்கிறது.  ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்த  நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. பல கலவெட்டுக்கள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலும் 50 கல்வெட்டுக்கள் தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் அமைந்துள்ளன. இந்தத்  தகவல்கள் திருமலை திருப்பதி ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s