மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழ சீசன் வந்து விட்டது  முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் இந்தியாவில் 4500 ஆண்டுகளுக்கு முன்பாக்வே பயிரடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது  இது புராணங்களிலும் இடம் பெற்றுள்ளது.  மாங்கனித்திருவிழா இன்றும் புனிதவதியைக் குறித்து நடைபெற்று வருகிறது.

உலகின் மொத்த மாம்பழ உற்பத்தியில் 62 சதவீதம் இந்தியாவில்தான்.  ஆயிரம் ரகங்களுக்கு மேலே மாம்பழங்கள் உள்ளன.  மல்கோவா  நீலம்  பங்கனபள்ளி அல்போன்ஸா  சிந்தூரா  தேசேரி  சுவர்ணரேகா  பைரிகிளிமூக்கு ராஜபாளையம் சப்பட்டை சிந்து  சாஹிப் சந்த்   ரஸா…….  இப்படியாக பல நாமகரணங்கள்.

இதில் ரஸாவில் ரசம் அதிகம். சிந்துவும் சாஹிப் சந்தும் கொட்டையில்லாத பழங்கள். 

கிபி 1600ல் மணிலாவிலும் 1700ல் பிரேசிலிலும் போர்த்துக்கீசியரால் பரவியது மாம்பழம்.  1800ல் ஆஸ்திரேலியாவிலும் 1880ல் எகிப்திலும்  அறிமுகமானது.  மாம்பூ மாவிலை மாம்பட்டை மாம் பிசின் மாங்கொட்டை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. தொடர்ந்து மாம்பழம் உண்டால் நரம்பு தளர்ச்சி வராது.

மாங்கொட்டைப் பருப்பை உலர வைத்து பொடி செய்து தேன் குழைத்துச் சாப்பிட்டால் கோடைக்கால பிணிகளான நீர்ச்சுருக்கும் வயிற்றுக்கடுப்பும் ஓடியே போய்விடும். மாந்துளிரை மென்று வந்தால் பல்லின் உறுதிக்கு ஈடு இல்லை.  மாங்காயை அதன் அமிலத்தன்மை நீக்கும் பொருட்டு ஊறுகாய் செய்து மோருடன் சாப்பிட உடல் சூடு தணியும்.

மாவிலைத்தோரணம்  மங்கல அடையாளம்   மாம்பூவை சேகரித்து உலர்த்தி தணலில் போட்டால் அதுவே இயற்கையான் எதிர்மறை விளைவற்ற கொசு விரட்டி…….. மாம்பழத்தின் தோலுக்கு நம் சருமத்தை மெருகேற்றும் சக்தியுண்டு. மாம்பழச்சாறு அருமையான கோடைக்கால பானம்.  நாவறட்சி  கோடைக்கால மயக்கம் பித்தம் இவற்றைக் குணப்படுத்தும்.

இயற்கையின் பெருங்கொடையான மாம்பழத்தி கிடைக்கிற காலத்தில் உபயோகப்படுத்துவோம்  பயன்பெறுவோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s