நியூ[ஸ்]மார்ட்

 

.

ராஜஸ்தான் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஷீஷ்.  இவருக்கு வயது 12. இவரது தந்தை சிகரெட்  புகையிலைக்கு அடிமை. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தை “ நான் படித்து முன்னேறி என் கனவுகள் நனவாகும் நேரத்தில் நான் மிகவும் நேசிக்கும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். இந்தப் புகையிலைக்கு பலியாகியிருப்பீர்கள். ‘ என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதினாள்.  இதை ஒரு நண்பர் மாவட்ட சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்க அத்துறை அதிகாரிகள் அந்தச் சிறுமியை ராஜஸ்தான் மானில புகையிலை ஒழிப்புப் பிரசாரத் தூதராக நியமித்திருக்கிறார்கள். அவளது தந்தையும் புகையிலை சிகரெட் இரண்டையும் விட்டுவிட்டார்.

தூத்துக்குடியில் குப்பை லாரி ஓட்டுனராகப் பணிபுரிகிறார் ஜெயலட்சுமி. அவர் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். தந்தையின் நண்பரது கார் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராகப் பணியாற்றியபடியே ஆர்வத்தால் கனரக வாகனங்கள் ஓட்டவும் கற்றுக்கொண்டாராம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த்தின் பேரில் திரு நெல்வேலி மானகராட்சியில்  டிரைவராகப் பணியாற்ற  வாய்ப்பு வந்த்தும் அதை உற்சாகமாக ஏற்றுக்கொண்ட்தாக சொல்கிறார்.  கல்வித் தகுதி இருப்பதால் நகராட்சி அலுவலக வேலை கிடைத்தும் போகவில்லையாம். ஒரு நாளைக்கு குப்பையை எடுக்கலைன்னா ஊர் நார் போயிடும். நகரைச் சுத்தம் செய்யற உயர்ந்த பணியை செய்கிறேன்  இந்த வேலை எனக்கு மன நிறைவைத் தருகிறது என்கிறார் ஜெயலட்சுமி.

பொதுவாக ஷாம்பு கெச்சப் பெயின்ட் அழகு சாதங்கள் இவற்றில் கடைசிவரை எடுக்க முடியாமல் சில துளிகள் ஒட்டியிருக்கும்போதே தூக்கி எறிந்து விடுகிறோம்.  இதனால் உலக அளவில் பெரும் அளவில் வீணாகிறது. இதைத் தடுத்து கடைசித் துளிவரை வழுக்கிக்கொண்டு வருமாறு  ஒரு புதிய கோட்டிங் ஒன்றை இந்தைய விஞ் ஞானியான குருபா வாரனாசி  அமெரிக்காவில் கண்டு பிடித்திருக்கிறார். இதன் பெயர் லிக்விக்லைட்   liquiglide  இதை உட்புறம் தடவி விட்டு எந்தப் பொருளை பேக் செய்தாலும் ஒரு சொட்டுக்கூட வீணாகாமல் வெளியே வந்துவிடும். இது மிகவும் பாதுகாப்பானது என்று சொல்கிறார்.

இந்திய சிறுவன் மௌக்லி பற்றிய கார்ட்டூன் படம் ஜைங்கிள் புக் வால்ட் டிஸ்னியால் 1967ல் தயாரிக்கப்பட்டு உலகப்புகழ் பெற்றது. அதையே முப்பரிமாணத்தில் டிஸ்னி டிஜிட்டல் 3டி கடந்த வருடம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. வசூலை அள்ளிக் குவித்ததோடு சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஆஸ்கார் விருதும் வென்றிருக்கிறது. இதில் சிறப்பு என்ன தெரியுமா?  முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகள் பெங்களூருவில் இந்திய கிராபிக்ஸ் வல்லுனர்களின் உழைப்பால் உருவானது என்பதுதான். இதற்காக இந்தியக் காடுகளில் 18000 கிலோமீட்டர்  பயணித்து பல காட்டு விலங்குகலின் அசைவுகளைக் கண்காணித்து 4 லட்சம் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே 2012 ல் ஆஸ்கார் விருது பெற்ற லைஃப் ஆப் பை படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளில் இந்திய வல்லுனர்கல் திறமையை நிரூபித்திருக்கிறார்கள்.

 

Advertisements

One thought on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s