தன்னம்பிக்கை செடி வளர்க்கிறீர்களா?

மேஜிக் செய்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?  சர்க்கஸ் சாகசங்களை நீங்கள் கண்டு களித்திருக்கிறீர்களா/ மாயா ஜால வித்தை காட்டுபவர் ஏற்கனவே தான் ஒளித்து வைத்த பொருளை திடீரென்று தோன்றச் செய்வார் அல்லது கண்ணெதிரே இருக்கும் ஒன்றை சட்டென்று மறையச் செய்வார்  அந்த மாதிரியான வித்தைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்தானே/ அந்த நிகழ்ச்சியை கொஞ்சம் மனக்கண்ணில் ஓடவிட்டுப் பாருங்கள். கூட்டத்தில் இருக்கும்  நூற்றுக்கணக்கான நபர்களில் யாராவது ஒருவர் தான் ஒரு பொருளை ஒளித்துவைப்பதையோ அல்லது மறைவிடத்தில் இருந்து எடுப்பதையோ பார்த்துவிட்டால் தன்னுடைய மேஜிக்கின் ரகசியம் வெளிப்பட்டுவிடும் என்பது மேஜிக்மேனுக்கு தெரியும்  ஆனால் அவர் அதனை நினைத்து பயந்து பயந்து நிகழ்ச்சியை நடத்துகிறாரா? அல்லது யாருக்கும் தெரியாதபடி அதாவது தான் செய்வதை மற்றவர்கள் உணர்வதற்கு முன்பு வேகமாக செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடு செய்கிறாரா?

நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடுதானே செய்கிறார்.  சர்க்கஸ் காட்சியில் உத்தரத்தில் தொங்கும் ஒரு பாரில் இருந்து மற்றொன்றுக்குத் தாவுகிறார் ஒரு வீர்ர். இன்னொருவரோ அந்தரத்திலேயே பல்டி அடித்துச் சென்று ஊசலாடும் பார் ஒன்றில் இருந்தவாரே தலைகீழாக தொங்கும் ஒருவரின்  கையைத் தாவிப்பிடித்துக்கொண்டு தானும் சேர்ந்து தொங்குகிறார்.  கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைவில் இருக்கும் ஓரிடத்தைக் குறிபார்த்துக் கத்தி எறிகிறார். ஒரு இளம் பெண் அந்தக் கத்தி எங்கே வந்து செருகுமோ அதற்கு பக்கத்தில் கொஞ்சமும் அசையாமல் நிற்கிறார் இன்னொரு பெண்.

வெறும் பயிற்சி மட்டுமே இருந்தால் இவற்றை எல்லாம் செய்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு  பயிற்சியோடு தவறு இல்லாமல் அதைச் செய்வோம் என்ற நம்பிக்கையும் அவசியம் அந்த  நம்பிக்கை கொஞ்சம் அசைந்தாலும் எல்லாமே தலைகீழாகத்தான் முடியும்.

குடம் நிறைய தண்ணீரை சுமந்து செல்லும் கிராமத்து பெண்களை பார்த்திருப்பீர்கள். அவர்கள் இடுப்பில் குழந்தை இருக்கும் தலையில் குடம் இருக்கும். உடன் வருபவர்களோடு பேசிக்கொண்டே செல்வார்கள். வழியிலே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள் அவர்கள் என்னவெல்லாம் செய்தாலும் தலையில் இருக்கும் குடத்திலிருந்து ஒருதுளி நீர் கூட தளும்பாது. குடமும் நழுவாது. இதெல்லாம் பழக்கத்தினால் வருவது என்று நீங்கள் சொல்லலாம்.  ஆனால் அந்தப் பழக்கத்தோடு நம்பிக்கையும் மறைமுகமாக அவர்கள் மனதுக்குள் குடியேறி நிரந்தரமாக் அங்கே  தங்கியிருக்கிறது என்பது தான் உண்மை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஒரு கனமான பாத்திரத்தை நீங்கள் தூக்க்ச் செல்கிறீர்கள் அப்போது உங்களைவிடக் குறைந்த பலம் உள்ள ஒருவர் அதைத் தூக்குவதைப் பார்க்கிறீர்கள்  அடுத்து நீங்கள் செல்லும்போது அது கொஞ்சம் கனமாகவே இருந்தாலும் தயங்காமல் தூக்கிவிடுவீர்கள். அதுவே உங்களைவிட பலசாலி ஒருவர் எடை குறைந்த ஒரு பொருளை தூக்கும்போது மிகவும் கனப்பது போல பாசாங்கு செய்தால் போதும்  அதைப் பார்த்துவிட்டு செல்லும் நீங்கள் அதை ரொம்பவே கனமாக உணர்வீர்கள்.

காரணம்  உங்கள் தன்னம்பிக்கை பார்ப்பது கேட்பது போன்றவற்றால் பாதிக்கப்படுவதுதான். உங்கள் மனதில் தன்னம்பிக்கையை நீங்கள் ஆழமாக பதிக்கவில்லை என்பதுதான். அதாவது உங்கள் ஆழ்மனதில் தன்னம்பிக்கை மரம்  வேண்டாம் செடிகூட முளைக்கவில்லை என்று அர்த்தம்.

 

நன்றி   விஜயலட்சுமி பந்தையன்

2 thoughts on “தன்னம்பிக்கை செடி வளர்க்கிறீர்களா?

Leave a comment