சீன சிவாலயத்தில் தமிழ் கல்வெட்டு

கி பி 1260 ஆண்டில் கட்டப்பட்ட திருக்கதாலீஸ்வர்ர் கோயிலில் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.  தமிழ் நாட்டில் புராதனக் கோயில்களில் இப்படிக் கல்வெட்டுக்கள் இருப்பது சகஜம். ஆனால் இந்தக் கோயில் இருப்பது சீனாவில்.  ஆச்சரியமாக இருக்கிறதா? குப்லாய்கான் என்ற சீன சக்ரவர்த்தியின் ஆணைப்படி இக்கோயில் கட்டப்பட்டது என்பதைச் சொல்லும் கல்வெட்டுதான் அது. அது மட்டுமல்ல தமிழில் எடுதப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டின் கடைசி வரி சீன எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் காண்டன் எனும் நகருக்கு வடக்கில் ஷூவான் சௌ என்னும் துறைமுக நகர் இருக்கிறது. பண்டைக்காலத்தில் தமிழ் வணிகர்கள் வியாபார நிமித்தம் அடிக்கடி இங்கே வந்து சென்றுள்ளனர். இப்பகுதியை ஆண்ட குப்லாய்கான் சக்கரவர்த்தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது இங்கே வந்திருந்த தமிழ் வணிகர்கள் சிவாலயம் கட்டினால் உடல் நலம் சீராகும் என்று சொன்ன யோசனையினை ஏற்று அந்த மன்னனால் ஷூவான்சௌ நகரில் அமைக்கப்பட்டது  ஓர் சிவாலயம்.  குப்லாய்கான் உலகையே நடுங்கச் செய்த செங்கிஸ்கானின் பேரன். அக்காலத்தில் சீன அரசர்களுக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் இடையே நல்லுறவு இருந்த்தாக சொல்கிறது வரலாறு.  குப்லாய்கானுடன் நட்புறவு பாராட்டிய பாண்டிய மன்னன்  குலசேகர பாண்டியன்.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறைவனை திருக்கதாலீஸ்வரன் உதய நாயனார் என்ற திருப்பெயரால் அழைத்தார்கள். கோயில் அமைந்த இடம் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது.  இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதய நாயனார் என அழைக்கப்பட்டார்.  சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சகயுகத்தில் சித்ரா பௌர்ணமி நாளில் இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

Advertisements

One thought on “சீன சிவாலயத்தில் தமிழ் கல்வெட்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s