கல்வி தரும் தலங்கள்

எழுத்தறிவிக்கும் இன்னம்பூர் நாயகன்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது இன்னம்பூர். அகத்திய முனிவருக்கு ஈசன் எழுத்துக்களை உபதேசம் செய்தருளிய தலம். அதனால் இத்தல ஈசன் எழுத்தறி நாதர் எனப் போற்றப்படுகிறார். ‘ எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ‘ என்னும் பழமொழிக்கேற்ப தமிழ் அறிவையும் கணக்கு அறிவையும் தந்து மாணவர்களுக்கு திருவருள் புரிகிறான்.

கலைவாணி அருளும் கண்டியூர்

தஞ்சாவூரில் உள்ள திருவையாறு தலத்துக்கு அருகே ஈசனின் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாக திருக்கண்டியூர் உள்ளது. நான்முகனின் அருகில் அமர்ந்தருளும் சரஸ்வதியைத் தரிசித்தால் கல்வி வளம் பெறுவதுடன் பரீட்சையில் தேர்ச்சி பெறவும் முடியும்.

அறிவைத் தரும் ஹயக்ரீவர்

செங்கல்பட்டுக்கு அருகே உள்ளது கெட்டி புண்ணியம் . இத்தல யோக ஹயக்ரீவர் பக்தர்களுக்குக் கல்வியையும் செல்வத்தையும் வாரி வாரி வழங்குகிறார். பரீட்சை எழுதச் செல்லும் முன் மாணவ மாணவியர் எழுதுகோலை இந்த ஹயக்ரீவரிடம் வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு பின்பே பரீட்சை எழுதச் செல்கின்றனர்.

ஞானம் தரும் லட்சுமி ஹயக்ரீவர்

கடலூர் திருவஹீந்திரபுரத்தில் உள்ளது.  தேவ நாதப் பெருமாள் திருத்தலம். இத்தலத்தில் லட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். ஹயக்ரீவருக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் கோயில் ஏற்பட்டது.

இந்த ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வேண்டிக்கொண்டால் கல்வி வரம் அருளுவார். தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்கள் இவரை வணங்கி பலனடையலாம்.

 

Advertisements

One thought on “கல்வி தரும் தலங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s