பூங்காவில் நடைப்பயிற்சி 2

கடந்த சில நாட்களாக  நான் என் வீட்டினருகிலுள்ள ஒரு பூங்காவில் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்கிறேன். அந்தப் பூங்காவின் ஒரு பக்கத்தில் நான் சுமார் 12 வருடங்கள் ஆசிரியையாக பணி செய்த பள்ளி உள்ளது. அதைப் பார்க்கும்போதெல்லாம் அங்கு நடந்த பல மறக்கமுடியாத நினைவுகளெல்லாம் நினைவுக்கு வரும். அது தவிர அந்தக் காலத்தில் அதாவது 1990 களில் இந்தப் பூங்கா இருக்கும் இடம் காலியாக இருந்த்து. எங்கள் பள்ளியின் முக்கிய நிகழ்ச்சிகள் அங்குதான் நடைபெறும். மேலும் அது அப்போது எங்களின் விளையாட்டு மைதானமாகவும் இருந்தது.

இப்போது அதைச் சுற்றிலும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள். காலை நேரமானதால் எல்லோர் வீட்டிலும் பரபரப்புத்தான். பல மொழிகள் கேட்கும்.  சிலர் வீட்டில் எம் எஸ்ஸின் சுப்ரபாதமும் பல வீட்டில் குழந்தைகளை எழுப்பும் அம்மாக்களின் சுப்ரபாதமும் கேட்கும்.  சில வீடுகளிலிருந்து பில்டர் காபியின் வாசனையும்  டீயின் மணமும் மூக்கை துளைக்கும்.  சிலர் வீட்டின் தோசை மணமும்  பூரி உருளை மசாலாவின் மணமும் நாக்கின் சுவையரும்புகளை தட்டி எழுப்பும்.

காலை  நேரத்தின் பரபரப்பு பல விதமான பாஷைகளில் செவியில் விழும்போது சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு நானும் இதே போல் பல வேலைகளுக்கிடையில் என் பெண்களை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்தது நினைவிலாடும். இப்போது அவர்களும்  இதே வேலையைத்தானே செய்து கொண்டிருப்பார்கள் என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டு நடைப்பயிற்சியின் அயர்வு தெரியாமல் வீடு திரும்புகிறேன்.

Advertisements

3 thoughts on “பூங்காவில் நடைப்பயிற்சி 2

  1. A very healthy & inspiring walking story. Everyone should take little time from their busy schedule to enjoy these moments for sure😃 feels like I too am walking with u

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s