தன் தாய்க்கு எழுதிய கடிதம்

அன்புள்ள அம்மா

எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாக ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன். பின்னர்தான் தெரிந்தது  வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறது என்று.

வாழ்க்கையில் விரும்புவது விரும்பப்படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிறது என்று தெரிய வருகிறது. எத்தனை பொறுப்புக்கள் எத்தனை சுமைகள்  எத்தனை எதிர்பார்ப்புக்கள்/ எத்தனை தியாகங்கள்/ எத்தனை ஏமாற்றங்கள்?  நினைத்த நேரத்தில் நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை.  குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்றே விருப்பமான உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன். இங்கே அவர்கள் விரும்பிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்.

இதோ என் தோழியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்றது போல் சொல்லி செல்ல முடியவில்லை. என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  நினைத்த நேரத்தில் தூங்க முடியாது  எனக்கு விருப்பமான பாடல்களை கேட்க முடியாது  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியாது.

 

சில நேரங்களில் எதற்கு இந்த திருமனம் என்று அலுப்பாக இருக்கிறது. இந்த திருமணம் என் சுதந்திரத்தை அல்லவா பறித்து விட்ட்து   என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்ட்து  உன்னிடம் இருந்தபோதே மிக மகிழ்வாக இருந்தேனே  உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது.  உன் மடியில் படுத்துக்கொள்ளணும் போல இருக்கிறது.  வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ  உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு  பின்னாலேயே வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. எந்தக் கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்கக்கூடாதா ? என்று தோன்றுகிறது.

ஆனால் அடுத்த கணமே  நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய்  நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது. நீ அன்று  நான் இன்று  நினைப்பது  போல நினைத்திருந்தால்  நான் இன்று இருப்பேனா/   நீ செய்த தியாங்கங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாரா அன்பையும் நான் திருப்பித்தர வேண்டாமா என்று நினைத்துக்கொள்கிறேன்.  அதுவும் உன்னிடமிருந்து கற்றது தான்………….. அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது. தெளிவாகப் புரிகிறது.

காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன். நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்.  உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை  என் குடும்பமும் எனக்கு தரும்.  ஆமாம்மா  நீ எனக்கு கொடுத்ததை  நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்  நன்றியம்மா

என்றும் அன்புடன்

…………………………….

 

பெண் அன்பில் ஒரு தாய்

பெண் அழகில் ஒரு தேவதை

பெண் அறிவில் ஒரு மந்திரி

பெண் ஆதரவில் ஒரு உறவு

பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு

பெண் வெற்றிக்கு ஒரு மாலை

பெண் தோல்விக்கு ஒரு பள்ளம்

பெண் நட்புக்கு ஒரு நேர்மை

பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்

இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்……………………

உலகின் அனைத்து மகளிருக்கும் அர்ப்பணம்

 

Advertisements

4 thoughts on “தன் தாய்க்கு எழுதிய கடிதம்

  1. A very thoughtful blog of the journey of a daughter to daughter-in-law😂. Very subtly drafted with appropriate pics. An universal truthful fact every daughter will agree. A perfect dedication on International Women’s Day!!!!

  2. அன்னையின் அன்பையும் குடும்பத்தின் பொறுப்பையும் அறிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s