மதிப்பிற்குரிய மகளிர்

 

எத்தனையோ பெண்கள் தங்கள் இளமையை செல்வத்தை வாழ்க்கையை இந்தியத் திரு நாட்டின் சுதந்திர வேள்வியில் எரித்துக்கொண்டுள்ளனர். ஆங்கில ஏகாதிபத்திய வெறியர்களால் உயிரிழந்தோரும் பலர்…………………. அனைவருக்கும் வீர வணக்கம். அதில் ஒரு சிலரை அறிந்து கொள்ளலாமே

ஸ்வர்ணகுமாரி தேவி என்னும் இவர்தான் பாரதி என்ற இதழின் ஆசிரியர்  இந்தியாவில் முதல் பெண்கள் பத்திரிகை இதுவே. இந்தியாவின் முதல் பெண்கள் பத்திரிகை ஆசிரியர் என்ற பெயரையும் பெறுகிறார்.  பெண் விடுதலைக்காக முனைந்த பாரதியாரின் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதனால் அடைந்த துன்பங்கள் பல அது மட்டுமல்ல. இவர் தொடங்கிய பெண்களுக்கான சங்கம். பிற்காலத்தில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட அத்தனை சங்கங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டது.  இவர் வங்கக் கவிஞர் ரவீந்திரா நாத் தாகூரின் தங்கை.

அசலாம்பிகை

சுதந்திரப் போராட்டக் கால பெண் கவிஞர். மேடைப்பேச்சாளர் பால்ய விவாகம் நடந்து தன் பத்தாம் வயதிலேயே வைதவ்யத்தை மேற்கொண்டவர். ஒரு விதவை மேடையேறி காந்தீயத்தைப் பரப்புவது என்பது எத்தனை கடினம் அந்தக் காலத்தில் இறைவனைப் பற்றியோ விடுதலை உணர்வு பற்றியோ இவர் பேச ஆரம்பித்து காங்கிரஸ் மாநாடுகளிலும்கூட பேச்சாளராகத் திகழ்ந்தார் எனில் இவர் அடைந்து வந்த துயரங்களை எண்ணிப் பார்க்கவும் இயலுமோ? திரு வி க இளைஞராய் இருந்த சமயம் கூட இந்த திண்டிவனப் பெண்மணி அசலாம்பிகை மேடைப் பேச்சில் மேன்மையானவராய் வலம் வந்துள்ளார். ஆனால் இவருடைய இறுதிக்காலம் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. இப்படி எத்தனையோ பெண்களை வரலாறு மூடி மறைத்துவிட்டிருக்கிறது.

லக்ஷ்மிசேகல்  நேதாஜியின் ஐ என் ஏ படையின் பெண்கள் பிரிவில் முதல் கேப்டன் ஜான்ஸிராணி ரெஜிமெண்டின் தலைவி. இவர் தந்தை சுவாமி நாதனும் சுதந்திரப் போராட்ட வீர்ர்.  இவருடைய புரட்சி முழக்கம் பல பெண்களை ஈர்த்தது. இவரை ரோல் மாடலாக்க் கொண்டே பல பெண்களும் படையில் சேர மிகுந்த ஆர்வம் காட்டினர்  ஆங்கிலேயர் இவரை விட்டுச் சிறையில் வைத்து பிறகு இந்தியாவுக்கு அனுப்பினர். மேற்படிப்புக்காக சிங்கப்பூர் சென்ற இவருடைய டாக்டர் கனவும் பாதியில் கலைந்தது. ஆனாலும் தேச விடுதலைக்குப் பின்பு ஐ என் ஏ தளபதி பிரேம்சேகலை மண்ந்து தன் மருத்துவ சேவையை இந்தியாவில் தொடர்ந்தார்.

பிகாஜி காமா பார்ஸி இனப் பெண்மணி. விடுதலைப் போராட்டத்தில் இவர் கொண்ட ஆர்வம் இவருடைய திருமண வாழ்க்கையையே முறித்துப்போட்டுவிட்டது.

ஆனாலும் அயரவில்லை  முதன் முதலாக மூவண்ணக் கொடியை வடிவமைத்து 1907 ம் வருடம் ஜெர்மனியில் நடந்த பொதுவுடமை மா நாட்டில் இந்தியா சார்பாக அக்கொடியை ஏந்திச் சென்றவர்.  அந்தக் கொடிதான் பல்வேறு மாற்றங்களுக்குப் பின்  இன்றைய மூவண்ணக் கொடியாகப் பட்டொளி வீசிப் பறக்கின்றது.

Advertisements

One thought on “மதிப்பிற்குரிய மகளிர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s