மனைவி அமைவதெல்லாம்…………

எமதர்ம மகாராஜன் ஒரு முறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிக்கொடுத்தான்.  அவள் மானுடப்பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துவிட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார்.  எமதர்மன் அவர் மணந்த பெண் நல்லவள் தான் என்றாலும்  நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாம் என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார்.  மகனே நீ சிறந்த வைத்தியனாக வரவேண்டும்  மரணத்தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியும் எப்படித் தெரியுமா?  ஒருவர் மரணமடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரியுவேன்.  நான் அங்கு இருந்தால் அவருக்கு நீ வைத்தியம் செய்யாதே  நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும்  நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்துவிடுவான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பர்வும் என்றான் எமன்.  மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக்கொண்டான். ஒருவர் கூட சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப்போகும்போது எதிரில் அப்பாவை பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்துவிடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பயனில்லை. இவனை அழைத்தார்கள்  என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன் என்றார் ராஜா.  அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் நின்று கொண்டிருந்தார் வைத்தியம் செய்தால் பிழைக்கமாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்  இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது  பளிச்சென்று யோசனை பிறந்த்து. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா அப்பா உள்ளே இருக்கார்  ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினாயே இங்க இருக்கார் என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம்  துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாய் ஓடிவிட்டான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ………………

Advertisements

2 thoughts on “மனைவி அமைவதெல்லாம்…………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s