பழைய சோத்துலே எவ்வளவு சத்து?

%e0%ae%aa%e0%ae%b4%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d

திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துச் சென்று கதாநாயகனுக்குத் தருவாள்  நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி மறு நாள் சாப்பிடும் இந்த பழைய சாத்த்தில் தான் விட்டமின் பி6 விட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது  என்கிறது புது ஆய்வு.  தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும்  ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் கவனியுங்கள் மில்லியன் இல்லை ட்ரில்லியன் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

சக்தி அபரிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது.   காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.  மறு நாள் இதைக் குடிக்கும்போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடற்புண்  வயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.p60a

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கவைக்கிறது.  இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தம் அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். உடல் எடையும் குறையும்.  மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி அரிப்பு போன்றவை சட்டென்று சரியாகிவிடும்.  அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர ஆச்சர்யப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில் கூட வராது.  ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s