நியூ[ஸ்]மார்ட்

maxresdefault

இந்திய விஞ்ஞானிகள் கலிபோர்னியா சான்பிரான்சிஸ்கோ பலகலைக் கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்கைச் சிறு நீரகத்தைத் தயாரித்துள்ளனர். இந்த செயற்கைச் சிறு நீரகம் இதயத்தின் செயல்பாட்டின் ஆற்றல் மூலம் ரத்தச் சுத்தகரிப்பு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் ஹார்மோன் உற்பத்தி உள்ளிட்ட சிறு நீரகத்தின் வேலைகளைச் செய்யும் என்றும் ஆனால் இந்த செயற்கைச் சிறு நீரகம் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறுகிறார்கள்.prof_vijay_kumar_1_0

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் மூவருக்கு சிறந்த மருத்துவ மற்றும் சமூகப் பணிகளுக்காக அந்த நாட்டின் மிக உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிட்னியைச் சேர்ந்த மருத்துவர் புருஷோத்தமன் சாவ்ரிகருக்கு “ ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா மெடல் “ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.  மருத்துவப்பட்டதாரிகள் சங்கத் தலைவராக புருஷோத்தமன் பொறுப்பு வகித்ததுடன் ‘ ஆகாஷ் வாணி சிட்னி ‘ என்ற சமூக வானொலியையும் நிறுவியவர். அடுத்து நியூரோ ரேடியாலஜி மருத்துவக் கல்வி உட்பட பல துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக டாக்டர் மக்கான் சிங்குக்கும் மற்றும் மருத்துவ துறையில் சிறந்த ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றியதற்க்காக சிட்னியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற மருத்துவருக்கும் விருது வழங்கப்பட்டது.  நியூக்ளியர் மெடிசின் துறையில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ள இவர். சிட்னி தமிழ்ச் சங்கங்களுக்காக்க் கடந்த 2007 மற்றும் 2014 ம் ஆண்டுகளில் ‘ ஆஸ்திரேலியன் நியூக்ளியர் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி ‘ நிறுவனத்தின் விருது பெற்றிருக்கிறார்.1485350588903

அண்மையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பல இடங்களில் மலைப்பாம்புகளின் ஆதிக்கம் அதிகமானதால் பெரும் தொல்லையாய் இருந்தது. அவற்றைப் பிடிப்பதற்கு யாருடைய உதவியை நாடியிருக்கிறார்கள் தெரியுமா?  அதுவும் 47 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து  நம் நாட்டு இருளர்களைத்தான்.  பொதுவாக தமிழகத்தின் இருளர் இன மக்கள் மலைப்பாம்பு பிடிப்பதில் தேர்ந்தவர்கள். அவர்கலில் இருவர் அமெரிக்கா சென்று ஒரே வாரத்தில் 13 மலைப்பாம்புகளை பிடித்துக்கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.zee

தென் பசிபிக் கடலுக்கு அடியில் புதியதாக ஒரு கண்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய கண்டம் உருவானது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.  உலகில் தற்போது ஆசியா ஆப்பிரிக்கா  அமெரிக்கா ஐரோப்பா ஆஸ்திரேலியா கண்டங்கள் உள்ளன.  இந்தப் புதிய கண்டம் நியூஸிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கி கிடப்பதாகத் தெரிகிறது. இதற்கு ஸீ லாண்டியா என்று பெயரிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் அளவில் மூன்றில் இரண்டு மடங்கு பெரியது என்றும் நியூஸிலாந்தைப் போன்று மூன்று மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது 94% கடல் நீருக்கடியில் மூழ்கியுள்ளது. இதன் வெளியே தெரியும் மேல்பகுதிகள்தான் நியூஸிலாந்தும் நியூகேலடோனியாவும் என்றும் இது ஆஸ்திரேலியாவிலிருந்து 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகப் பிரிந்து பசிபிக் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.  கொண்ட் வானாலேண்ட் என்ற சூப்பர் கண்டம் உடைந்து பிரிந்த்தின் ஒரு பகுதி இதுவாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.gsd

உலகின் அதிகக் கொடுமையான ஆயுதம் ஒன்று சமீபத்தில் இந்திய மதிப்பில் 1.63 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.  சர்வாதிகரி ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய போன் தான் அது. எத்தனை லட்சம் பேரைக் கொல்லும் ஆணைகள் இதன் மூலம் பிறப்பிக்கப்பட்டிருக்கும்  இந்த ஏலம் அமெரிக்காவில் நடத்தப்பட்டது.  இந்த கொலைக்கார தொலைப்பேசியை ஏலம் எடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இந்த போனில் நாஜி தலைவரின் பெயரும் ஸ்வஸ்திக் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. சர் ரேய்னர் என்பவர் ஹிட்லர் கடைசி காலங்களில் பதுங்கியிருந்த பதுங்கு குழியிலிருந்து இந்த போனை எடுத்துள்ளார். இதனை ரேய்னரின் இறப்புக்குப் பிறகு அவரது மகன் ரேனல்ஃப் ரேய்னர் பாதுகாத்து வந்தார்.

 

Advertisements

2 thoughts on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s