எதுவும் நடக்கும்

67

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரையை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப் பார்த்தது  வீட்டின் எஜமானனும் எஜமானியும்  ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது அந்த எலி.rat

அவர்கள் வெளியே எடுத்தது ஓர் எலிப்பொறி  அதைப் பார்த்ததும்   எலிக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது   உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த தோழியிடம் போய் சொன்னது. பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார் எனக்கு பயமாக இருக்கிறது என்று.  அதைக்கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.  உன்னைப் பொறுத்த வரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்  நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்று.wild

உடனே அது பக்கத்தில் இருந்த  வான் கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது  வான் கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன் என்றது   மனம் நொந்த எலி அடுத்த பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தை சொல்லியது. அது மட்டும் அல்ல ஆடு அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை. எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்பட சொல்கிறாயா/ என்று நக்கலும் அடித்தது.download

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்துவிட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப்போயினர்.  ஒரு அரைமணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்  எலி மாட்டிக்கொண்டுவிட்டது.  என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைக் கையில் தூக்கினால் ஆ என்று கத்தினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்துவிட்டது.   அவளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்ஷன்  போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜூரம் இறங்கவே இல்லை.images

அருகில் இருந்த ஒரு மூதாட்டி பாம்பு கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு சிக்கன் சூப் வைத்துக்கொடுங்கள்  நல்லது என்று யோசனை சொன்னாள். கோழிக்கு வந்தது வினை உடனுக்குடன் கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது கோழி உயிரை விட்டது  அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜூரம் தணியவில்லை  உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான் கோழியை அடித்தார்கள்.

வான் கோழியும் உயிரைவிட்ட்து. சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.  பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை   விருந்தாக  ஆடும்  உயிரைவிட்ட்து. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்தத்தோடு கவனித்துக்கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்குக் காரணமான எலிப்பொறியை தூக்கிப் பரணில் போட்டு விட்டார். பண்ணையார் இப்போது எலி தப்பித்து விட்டது.

நீதி

அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்னை என்று வந்தால் என்ன என்றாவது கேளுங்கள்  ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்னை எப்போது வரும் என்ரு யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்னை நமக்கும் வரலாம் அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

 

Advertisements

One thought on “எதுவும் நடக்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s