கண்ணாடி சொல்லும் மூன்று பாடம்

 

கண்ணாடி சொல்லும் முதல் பாடம்

Beautiful Classic Patterned Design Luxury Wall Mirrors Ideas
Beautiful Classic Patterned Design Luxury Wall Mirrors Ideas

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை குறைப்பதும் இல்லை உள்ளது உள்ளபடி காட்டுகிறதல்லவா? அதேபோல் உன் சகோதரனிடம் நண்பனிடம் கணவரிடம்  மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்  எதையும் மிகையாகவோ ஜோடித்தோ சொல்லக்கூடாது  துரும்பைத் தூண் ஆக்கவோ கடுகை மலையாக்கவோ கூடாது.

கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்mirror

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது.  நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்  அதே போல் மற்றவரின் குறைகளை  அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.

கண்ணாடி சொல்லும் மூன்றாவது பாடம்download

ஒருவருடைய முக குறையை கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ எரிச்சலோ படுகிறாரா இல்லையே?  அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர் மீது கோபமோ எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிகும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s